வியலூர் (திருவியலூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சாந்தநாயகி உடனுறை யோகானந்தீசுவரர்


மரம்: வில்வம், அரச மரம்
குளம்: சடாயு தீர்த்தம்

பதிகம்: குரவங்கமழ்நறு -1 -13 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவிசலூர் அஞ்சல்
வேப்பத்தூர் வழி
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612105
தொபே. 0435 2000192

இத்தலம் பண்டாரவாடை திருவியநல்லூர் என்று வழங்கப் பெறுகிறது. வியலூர் என்ற பெயரோடு தஞ்சை மாவட்டத்தில் வேறு இரண்டு ஊர்களும் உள்ளன. சோழநாட்டுக் காவிரிவடகரைத் தலம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர் வழியாகப் பேருந்து வசதி உள்ளது. சுவாமிபெயர் யோகானந்தீசுவரர். அம்மைபெயர் சாந்தநாயகி. தீர்த்தம் சடாயுதீர்த்தம். இறைவன் புராதனேசுவரர், வில்வாரண்யேசுவரர் எனவும் பெயர் பெறுவர். அம்மை சௌந்தரநாயகி எனவும் வழங்கப்பெறுவர். ஜடாயு வழிபட்டுப் பேரின்பம் எய்திய தலம்.



கல்வெட்டு:

அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் மொத்தம் 94 உள்ளன. இத்தலம் கி.பி. 985-1013 இல் அரசாண்ட முதல் இராஜ கேசரிவர்மன் காலத்து அவனிநாராயண சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்ததென்றும், 1011-1043ல் அரசாண்ட இராஜேந்திர சோழதேவன் காலத்து வடகரை இராஜேந்திர சிம்மவளநாட்டு மண்ணி நாட்டுப் பிரம்மதேயமான வேப்பத்தூர் சோழமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிகிறது. சுவாமிபெயர் சிவயோக நாதர் எனவும் (-338 of 1907), உமாமகேசருக்கு ஆண்டநாயகர் எனவும் (-364 of 1907), கல்வெட்டுகள் பெயர் கூறுகின்றன. இத்தலத்துக் கல்வெட்டுகளால் குறிக்கப்பெறுகின்ற சோழமன்னர்கள் பன்னிருவர். பாண்டியர் ஒருவர். விஜயநகர கிருஷ்ணதேவராயர் ஒருவர். இவர்களில் கி.பி.862 முதல் 894 வரை ஆண்ட பாண்டிய மன்னனாகிய வரகுண பாண்டியனது 38-ஆம் ஆண்டின் நிகழ்ச்சி ஒன்று குறிக்கப்பெறுவதால் இக்கோயில் அதற்குமுன்பே கற்றிருப்பணியாகச் செய்யப்பெற்றமை தெளிவு (-17 of 1907.). பராந்தகன் I கி.பி. 907 முதல் 947 வரை ஆட்சி நடத்தியவன். இவனுடைய ஆட்சி கி.பி. 16 ஆம் ஆண்டில் விளக்கீட்டிற்காக ஆடுகள் விடப்பெற்றன. பொன்னும் கொடுக்கப்பெற்றன (-23 of 1907), இவன் மதுரை கொண்ட பரகேசரி வர்மன் எனக் குறிக்கப்பெறுகின்றான். .

பராந்தகன் I & II காலங்களில் விளக்குக்காகப் பொன்னும் ஆடு களும், அபிஷேகத் திரவியங்கட்காக நிலமும் அளிக்கப்பெற்றன. செம்பியன் காரைக்காடு உடையானாலும் (-9 of 1907)பராந்தகப் பல்லவராயன் என்பவனாலும் விளக்கிற்காக ஆடுகளும்(-18 of 190 7) பணமும் அளிக்கப் பெற்றன. இவன் தருமங்களில் விளக்கிற்காக அளித்தமையே பெரிதும் காணப்படுகின்றன. விசலூர் உடைய நாயனார்க்குத் திருமஞ்சனநீர் காவிரியிலிருந்து கொண்டுவர நிலம் விட்டான். இதில் திருவிசலூர் மகாதேவ பட்டாரகர் என இறைவன் திருநாமம் குறிக்கப்பெறுகின்றது (35 of 1907)

முதல் இராஜராஜன் கி.பி. 985 முதல் 1013 வரையில் ஆண்டவன். இவன் காலத்தில் கோவில் விளக்குக்குப் பணம் கொடுக்கப்பட்ட செய்திகள் குறிக்கப்பெறுகின்றன. கிராமங்களின் நிலவிற்பனைகளும் பொறிக்கப்பெற்றுள்ளன. இவனுடைய அரசி ஒருத்தி பொன்னளித்திருக்கின்றாள் (-19 of 1907) திருமஞ்சனத்தில் இடப்பெறு கின்ற ஸ்நான திரவியங்களுக்காகவும், பிராமண போஜனத்திற் காகவும் பொன்னளித்திருக்கிறாள். மிகச் சிறப்பாக இவன் ஆட்சி 29 இல் அரசன் துலாபாரம் புக்குத் தானம் செய்தான் என்றும், அரசி தந்திசத்தி விடங்கியாரான லோகமாதேவியார் ஹேமகர்ப்பதானம் செய்தாள் என்றும் குறிக்கப்பெறுகின்றன. (-42 of 1907) பிச்சுதேவன் என்னும் அரசகாரியம் பார்ப்பான் கருப்பக்கிருகப் பணிக்காக நிலம் விட்டமை தெரிகிறது. இராஜேந்திரன். இவன் கி.பி. 1011 முதல் 1043 வரை ஆண்டவன்.

இவன் காலத்திய கல்வெட்டுக்கள் பதின்மூன்று உள்ளன. அவற்றால், திருவிசநல்லூர் உடைய மகாதேவர்க்குத் தங்கக் கச்சை அளித்ததும், சிதாரிக்காக நறும்புகையிட நிலம் அளித்ததும், விளக் கிடப் பணமும் நிலமும் ஆடுகளும் அளித்ததும் அறிவிக்கப் பெறுகின்றன(-1, 15, 338, 339 of 1907) . அவனுடைய மனைவியான அரசியொருத்தியால் அபிஷேகத்திற்கு வெள்ளிக் கலசம் ஒன்று அளிக்கப்பெற்றது (-340 of 1907). இவன் தனது மூன்றாவது ஆண்டில் திருவிசநல்லூர் மாதேவர் கோயிலையும், கோபுரத்தையும் திருப்பணி செய்தான். இவன் மனைவியான நக்கன் செம்பியன் மாதேவியாரால் விளக்குக்கு ஏற்பாடு செய்யப்பெற்றது.

இவனுக்கு உருத்திரன் அருள்மொழியான பிருதி மகாதேவி என்றொரு மனைவியும் இருந்தனர்(-349 of 1907). இவனுக்கு அத்தை யும், வல்லவராயர்வந்தியத்தேவர் மனைவியுமான குந்தவ்வை தேவியார் பழையாறையில் இருக்கும்போது நிலம் அளித்தார் என்ற செய்தியை அறிவிக்கும் கல்வெட்டு சரித்திர ஆராய்ச்சியாளர்க்குப் பெருவிருந்தாவது (-350 of 1907. ).

குலோத்துங்கன் III. இவன் கி.பி. 1178 முதல் 1218 வரை ஆண்டவன். இவனுடைய ஆட்சி பதினெட்டாம் யாண்டில் நில விற்பனையைப்பற்றிக் கூறுகிறது. அதில் வேம்பத்தூர் எதிரிலிச் சோழச் சதுர்வேதி மங்கலமான வேம்பத்தூர் என அழைக்கப்பெறுகின்றது. ஏனைய முதல் மூன்று கல்வெட்டுக்கள் அரசாங்க நில அளவைமுறை களையும் நிலவிற்பனையையும் அறிவிப்பன.

தென்புறப் பிராகாரத்தில் உள்ள கருப்பக்கிருகத்தின் வடக்குச் சுவரில் அந்த மண்டபத்தைக் கட்டியவனான ஆனந்த சிவன் என்பவ னுடைய உருவம் இருக்கிறது. அதில் ஒரு பகுதியைச் சுவர் மறைத்து விட்டது.

 
 
சிற்பி சிற்பி