வெஞ்சமாக்கூடல் (திருவெஞ்சமாக்கூடல்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு விகிர்தேஸ்வரி உடனுறை விகிர்தேசுவரர்


மரம்: வில்வம்
குளம்: விகிர்த தீர்த்தம்

பதிகம்: எறிக்குங்கதி -7 -42 சுந்தரர்
முகவரி: வெஞ்சமாங்கூடலூர் அஞ்சல்
மூலப்பாடி
அரவக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம், 639109
தொபே. 04320 238442

இவ்வூரை வெஞ்சமாங்கூடலூர் என்று மக்கள் வழங்கு கின்றனர்.

வெஞ்சன் என்னும் அசுரராசனுக்கு இராசதானி ஆதலால் இப்பெயர் எய்தியது என்றும், வெஞ்சன் என்னும் அசுரன் பூசித்த தலமாதலால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கரூரிலிருந்து இருபது கி.மீ. தொலைவில் சிற்றாதன் கீழ்க்கரை மேலுள்ளது. இக்காலம் பேருந்து வசதி உண்டு.

சிவபெருமான், தம்மிடம் பற்று உடைய ஒரு கிழவியிடம் தம் பிள்ளைகளை ஈடுகாட்டிப் பொன் வாங்கிச் சுந்தரர்க்குக் கொடுத்தருளிய தலம். இவ்வரலாற்றைக் கொங்கு மண்டலசதகத்தில் `கிழவேதிய வடிவாகி எனத் தொடங்கும் பாடலில் காணலாம்.

இறைவர்:- விகிர்தேசுவரர். இத்திருப்பெயரை ஒவ்வொரு பாடல்தோறும் காண்க.

இறைவி:- விகிர்தேஸ்வரி,
கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1905 No. 143-150.)

இக்கோயில் கல்வெட்டில் இறைவர் வெஞ்சமாக்கூடல் விகிர்தர் என்னும் திருப்பெயராலும், இறைவியார் பனிமொழியார் என்னும் பெயராலும் குறிக்கப்பட்டுள்ளனர். சுந்தரபாண்டிய தேவராகிய கண்டியதேவர். அம்மன் கோயிலைச் சற்று விரிவாகக் கட்டியும், பழுதுபார்த்தும் உள்ளார். இங்ஙனம் இவர் செய்ததுபரகேசரிவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி வீரபாண்டியனின் மூன்றாம் ஆட்சியாண்டில்ஆகும்.

கோனேரின்மைகொண்டான் கல்வெட்டு ஒன்றின் தலைப்பில் ஜெயகேசரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது திருவெஞ்சமாக்கூடல் ஊரையே இறைவர்க்கு அளிக்கப்பட்ட செய்தியை உணர்த்துகின்றது. இந்த வெஞ்சமாக்கூடல் என்னும் ஊர் வெங்காலநாட்டுக்கு உட்பட்ட ஊர்களில் ஒன்றாகும்.

 
 
சிற்பி சிற்பி