முகத்தலை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு சாந்தநாயகி உடனுறை பன்னகாபரணர்


மரம்: புன்னை

திருவாரூர் மாவட்டத்தில் திருத்தருப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லும் பெருவழியில், திருத்தருப்பூண்டியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள கொக்காலடி இறங்கி வடக்கே மானாச்சேரி செல்லும் மணல்வழியில் ஒரு கி.மீ தொலைவில் உள்ள பன்னத்தெரு என்னும் ஊரே இம்முகத்தலை என்னும் ஊர். இவ்வூர்க்குரிய திருவிசைப்பாவில் மூன்று இடங்களில் பன்னகாபரணா என இறைவர் அழைக்கப்படுகின்றனர். ஆதலின் இதுவே முகத்தலை என்பர் சைவ அன்பர் திருவாளர் தி.கு. நாராயணசாமி நாயுடு அவர்கள். இத்தலம் மதுரை ஆதீன அருளாட்சியில் விளங்குவது.கல்வெட்டு:

(See the Annual reports on South Indian Epigraphy for the year 1926. Nos. 163-164)

இப்பன்னத்தெருக் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் மூன்றாங்குலோத்துங்க சோழனுடைய 18ஆம் ஆட்சி ஆண்டிலும், 25ஆம் ஆட்சி ஆண்டிலும் பொறிக்கப்பட்டவை. இவைகளுள் முன்னது இக்குலோத்துங்க சோழனை மதுரையும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின எனவும்; பின்னது மதுரையும், ஈழமும், கருவூரும், பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின எனவும் குறிப்பிடுகின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவரின் திருப்பெயர் `பன்னகாபரணேஸ்வரர்\' எனக் குறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுக்களுள் முதல் கல்வெட்டு செல்கல் என்னும் ஊரில் இருந்த வீமநாயக்கன் என்னும் பெயருள்ள எண்ணெய் வியாபாரியிடமிருந்து ஒரு நுந்தா விளக்கு எரிப்பதற்கு 400 காசையும், இரண்டாம் கல்வெட்டு குலோத்துங்கசோழ வளநாட்டுத் திரு வாஞ்சியம் என்னும் ஊரில் இருந்த கங்கைகொண்ட வேளார் ஆகிய திருவேங்கட தேவனிடமிருந்து விளக்கு எரிப்பதற்கு 1300 காசையும்; இக்கோயிலுக்குரிய சிவப்பிராமணர் பெற்றனர் என்பனவற்றை உணர்த்துகின்றன.

இக்கல்வெட்டுக்களில் ஊரின் பெயர் முகத்தலை என்று குறிக்கப்படவில்லை. பழைய கல்வெட்டுக்களில் ஊரின் பெயரையே இறைவனுக்கு வைக்கப்படுவதுண்டு. 1926ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிக்கை இத்துறையில் வல்லவர்களால் எழுதப்பட்டது. முகத்தலை என்பது ஊரின் பெயராய் இருப்பின் அதை, அந்த அறிக்கையில் கல் வெட்டுத் துறையினர் குறித்தே இருப்பர். அங்ஙனம் குறிக்காமையால் பன்னத்தெரு என்னும் ஊரே முகத்தலை என்பது ஆய்தற்குரியது.

 
 
சிற்பி சிற்பி