இடைச்சுரம் (திருவிடைச்சுரம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு இமய மடக்கொடியம்மை உடனுறை இடைச்சுரநாதர்

மரம்: வில்வம்
குளம்: அக்கினி

பதிகம்: வரிவளரவி -1 -78 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவடிசூலம்,
செம்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம், 603108
தொபே. 044 27420485

தொண்டை நாட்டுத்தலம். மக்கள் வழக்கில் திருவடிசூலம் என வழங்கப்படுகிறது. செங்கற்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் பேருந்தில் திருவடிசூலம் செல்லலாம். பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது.

இத்தலம் மலைகளின் இடையில் கற்சுரத்தில் அமைந்தமையின் இப்பெயர் எய்தியது. சனற்குமாரமுனிவர் பூசித்துப் பேறுபெற்ற தலம்.

மூலலிங்கம் தீபஒளி பிரதிபலிக்கக் கூடிய மரகதலிங்கம். சம்பந்த சுவாமிகள் தூரத்தே எழுந்தருளும்போது திருமேனிச் செம்மைகண்டு ``இடைச்சுரமேவிய இவர் வணம் என்னே`` என்று வியந்துள்ளார். இறைவன் இடைச்சுரநாதர், ஞானபுரீசுரர். இறைவி இமய மடக்கொடியம்மை.


கல்வெட்டு:

சோழ அரசன் குலோத்துங்க சோழதேவன் ஆட்சியில் ஜயங் கொண்ட சோழ மண்டலத்திலுள்ள களத்தூர்க் கோட்டத்தின் பகுதியான வளநாட்டிலுள்ள திருவிடைச்சுரம் என்று(335 of 1908) குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் திருவிடைச்சுரமுடைய நாயனார்; திருவிடைச்சுரம் உடையார் என்றும், வழங்கப்பெறும். இங்கு ஜனனபுரீசுவரர் கோயில் ஒன்று உள்ளது. மேலும் கோவர்த்தன அம்பாள் திருக்காமக் கோட்ட முடைய பெரிய நாச்சியார் உருவம் நிறுவ, பெருந்தண்டிலத்திலுள்ள கருப்பக்கிருகம் கட்டப்பட்டதையும் கூறுகிறது(346 of 1908). இந்த இறைவி கருப்பக்கிருகத்திற்கு விளக்குப்போட, ஆவன செய்யப்பட்டுள்ளது(347 of 1906). மகாமண்டலேசுவர குமார ஜலகராஜ திருமலையதேவ மகாராயரால் விளக்குக்காகவும் படையலுக்காகவும் நிலம் கொடுக்கப்பட்டது(337 of 1908). பிள்ளையார் நீலங்கநாயனாரைப் பற்றி(342 of 1908) விவரிக்கின்றது.

ஏனையவை விளக்கிற்காகவும் பிறவற்றிற்காகவும் பொன், நிலம், ஆடுகள், பசுக்கள் இவைகள் அளிக்கப்பட்டமையை அறிவிக்கின்றன.

 
 
சிற்பி சிற்பி