இடையாறு (திருவிடையாறு)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சிற்றிடைநாயகி உடனுறை இடையாற்றுநாதர்

மரம்: மருத மரம்
குளம்: பெண்ணையாறு

பதிகம்: முந்தையூர்மு -7 -31 சுந்தரர்

முகவரி: இடையாறு அஞ்சல்,
திருக்கோயிலூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம், 607203
தொபே. 04146 216045

திருவெண்ணெய் நல்லூருக்கு வடமேற்கே ஐந்து கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது.
சுகர் என்னும் முனிவர் பூசித்துப் பேறுஎய்தினர்.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில், சோழமன்னர்களில் குலோத்துங்கசோழ தேவர், இராசகேசரி வர்மராகிய உடையார் இராசேந்திரசோழதேவர், இவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னர்களில் திரிபுவனச் சக்கரவர்த்தி ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன், இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில் அச்சுததேவமகாராயர், சதாசிவமகாராயர், இராமதேவமகாராயர், முதலானோர் காலங்களிலும், சாளுவ மன்னரில் நரசிங்கதேவமகாராயர் காலத்திலும் செதுக்கிய கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருமருதந்துறை உடைய நாயனார் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளார். இவ்வூர், இராஜராஜவளநாட்டு, திருமுனைப்பாடி இடையாற்று நாட்டு இடையாறு என்று குறிக்கப்பட்டுள்ளது.

ஒரிசாதேசத்து கஜபதி மன்னனது படையெடுப்பால், திருமருதந்துறை உடையார்கோயில் அழிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பாலைவனம்போல் கிடந்தது. சாளுவநரசிம்மதேவனின் பிரதிநிதி ஒருவர் இக்கோயிலைக்கட்டி அதற்கு வழிபாட்டிற்கு ஜோடி, சூல வரிகளைக் கொடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சி இம்மன்னனது சகம் 1393 அதாவது கி.பி.1471 இல் ஏற்பட்ட கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. எனவே கஜபதி மன்னரது படையெடுப்பு சகம் 1383 அதாவது கி.பி.1461 இல் ஏற்பட்டிருக்கவேண்டும்.

இதற்கு முன்னரே திருமருதந்துறை உடையார் கோயில் நான்கு ஆண்டுகள் பூசனையின்றிக் கிடந்தது. விசயநகர வேந்தரில் இரண்டாவது புக்கன் என்னும் மன்னனது மகனாகிய வீர பூபதி என்பவன் சகம் 1337 அதாவது கி.பி. 1415 இல் பண்டுபோல் பூசனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தான்.

இக்கோயிலில் உள்ள சுப்பிரமணியக் கடவுளின் பெயர் கலியுகராமப் பிள்ளையார் என்பதாகும். இவரை இக்கோயிலில் எழுந்தருளுவித்தவன் அனுமலுழான் கொங்கராயன் ஆவன். இப்பெருமானுக்கு நாள்வழிபாட்டிற்கு, திரிபுவனச்சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சில நிலவரிகளைக் கொடுக்குமாறு உத்திரவிட்டுள்ளான்.

இக்கோயிலில் சிவதானீஸ்வரம் உடையாரை எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நில நிவந்தம் அளித்தவன் அனுமலுழான் வேளான் விளநாட்டரையன் திருமருதந்துறை உடையான் ஆவன். இச்செய்தி இங்குள்ள மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியன் கல்வெட்டால் புலப்படுகின்றது.

உத்தரன் பாக்கத்திலிருந்த சுத்தமல்லன் ஆட்கொண்டதேவன் கொங்கராயனின் தந்தையார், திரிபுவனச்சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவனின் 23 ஆம் ஆண்டில் திருமருதந்துறை உடையார் கோயிலுக்கு `பல்லவராயன் ஏந்தல்` என்னும் பெயருடைய நிலத்தைக் கொடுத்துள்ளான். இந்த மருதந்துறை உடையார் திருக்கோயிலின் நான்கு மதில்களும் அழிவுற்றிருந்ததை நரசிங்கதேவராயரின் பிரதிநிதி அண்ணமராசர் பழுது பார்த்தற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

 
 
சிற்பி சிற்பி