இந்திரநீலபருப்பதம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு நீலாம்பிகை உடனுறை நீலாசலநாதர்

பதிகம்: குலவுபாரிடம் -2 -27 திருஞானசம்பந்தர்

முகவரி: அரித்துவாரம் வழி,
பத்திரிநாதர்,
உத்திராஞ்சல் மாநிலம்

இது நார்க்கட்டியகன்ஜ் - பிக்னதொரி (B.N.W.Ry.) இருப்புப் பாதையில் பிக்னதொரிதொடர் வண்டி நிலையத்தில் இருந்து 52 மணி நேரப் பயணத் தொலைவில் உள்ளது.

இந்திரன் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. ``மேகங்கள் மேலே கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால் நீலபர்ப்பதம் எனப் பெயர் பெற்றது போலும்`` என்பார் திரு. C.K. சுப்பிரமணிய முதலியார் அவர்கள். இது வட நாட்டுப்பதிகள் ஐந்தனுள் ஒன்று.

இமயத் தலமாகிய பத்ரிநாத்திலிருந்து விடியற் காலம் 4-30 மணி அளவில் இம்மலைச் சிகரத்தைத் தரிசிக்கலாம்.

இந்திரன் பூசித்த செய்தி இவ்வூர்த் திருஞானசம்பந்தர் தேவாரத்தின் திருக்கடைக் காப்பிலுள்ள ``இந்திரன் தொழு நீல பர்ப்பதம்`` என்னும் பகுதியால் அறியக்கிடக்கின்றது. இதற்குத் திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்றுள்ளது.


கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி