எறும்பியூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீசர்


மரம்: வில்வம்
குளம்: பிரம, பதும, மது, குமார தீர்த்தங்கள்

பதிகம்: விரும்பியூறு -5 -74 திருநாவுக்கரசர்
பன்னியசெந் -6-91 திருநாவுக்கரசர்

முகவரி: திருவெறும்பூர் அஞ்சல்
திருச்சி மாவட்டம், 620013
தொபே. 0431 2510241

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவெறும்பியூர் (திருவரம்பூர்) தொடர்வண்டி நிலையத்துக்கு வடமேற்கே 1கி.மீ தொலைவில் உள்ளது.

தேவர்கள் எறும்பு உருவம் எடுத்துப் பூசித்த காரணத்தால் எறும்பியூர் என்னும் பெயர் ஏற்பட்டது.

நைமிச முனிவர், பிரமதேவர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். கோயில் மலைமேல் உள்ளது. இலிங்கமூர்த்தி வடபுறம் சாய்ந்திருக்கிறார்.



கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் முதலாம் ஆதித்த சோழன் கண்டாராதித்தன், சுந்தரசோழன், முதலாம் இராஜராஜன் முதலானோர் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளில் இறைவர், திருவெறும்பியூர் ஆழ்வார், திருமலை மேல் மகாதேவர் என்னும் திருப்பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர்.

கல்வெட்டுத் துறையாளரால் முதலாம் ஆதித்தன் கல்வெட்டு என்று கருதப்படும். கோவிராஜகேசரிபன்மற்கு யாண்டு நாலாவது என்று தொடங்கும் கல்வெட்டில் இறைவர் ஷ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து தென் கயிலாயத்து மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளனர்.

(See the Annual Reports on the South Indian Epigraphy for the year 1892, No. 96-142.See also the South Indian Inscriptions, Vol. XII.See also The Cholas, No. 50, 51, 88, 110-114, 138-140, 162-166, 283, 286 and 287).

திருவெறும்பியூர் ஆழ்வார்க்கு ஷ்ரீ விமானம் எடுப்பித்தவன் சிறுதவூருடையான் வேளான் வீரநாராயணனான செம்பியன் வெய்தி வேளான் ஆவன். இவன் இக்கோயிலில் மூன்று சந்தியும் உடுக்கையும் தாளமுங் கொண்டு நால்வர் அடிகள்மார் திருப்பதிகம் பாடுவதற்கு நில நிவந்தம் அளித்திருந்தான்.

தென்கயிலாயத்து மகாதேவர்க்குத் திருவரங்க தேவரடியாள் சேந்தன் செய்யவாய் மணி சந்திவிளக்கு ஒன்றுக்கும், ஆற்றுத் தண்ணீரமுது தூணி கொள்ளிக்குடத்தால் நிசதி ஒரு குடத்துக்கும் ஆகப் பதின் கழஞ்சு பொன்னைவைத்து அதன் வட்டியால் அவைகளைச் செய்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தான்.

மேற்குறித்த செம்பியன் வெய்திவேளான் திருவெறும்பியூர் ஆழ்வார் மலைமேல் சந்திராதித் தவல் பிராமணர் பதினைந்துபேர் உண்பதற்கு நில நிவந்தம் அளித்திருந்தான்.

 
 
சிற்பி சிற்பி