ஓத்தூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு இளமுலைநாயகி உடனுறை வேதநாதர்


மரம்: பனை
குளம்: சேயாறு

பதிகம்: பூத்தேர்ந்தா -1 -54 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவத்திபுரம்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், 604407
தொபே. 04182 224387

தொண்டை நாட்டுத்தலம். வடார்க்காடு மாவட்டம் செய்யாறுக்கு அருகில் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.இது திருவத்தூர் என வழங்குகிறது.

இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை அருளிச்செய்தமையால் இப்பெயர் பெற்றது. சம்பந்தசுவாமிகள் எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்துவந்த சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் பனைவைத்து வளர்த்தார். அவை ஆண்பனையாயின. சமணர்கள் பரிகசித்தனர். அதைக்கண்டு இவர் வருந்திச் சுவாமிகளிடம் விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தர் பதிகம்பாடி, திருக்கடைக்காப்பில் ` குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்` என்று அருளியபோது அவை பெண்பனைகளாயின. ஆலயத்தில் பனை உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பூசிக்கப்பெற்று வருகிறது. சிவாலயத்துள்ளேயே ஆதிகேசவப்பெருமாள் சந்நிதியும் இருக்கிறது. சுவாமி வேதநாதர். அம்மை இளமுலைநாயகி. தீர்த்தம் சேயாறு (வேததீர்த்தம்).



கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் 29 உள்ளன. அவற்றுள் இராஜாதிராஜன், குலோத்துங்கன், இராஜேந்திரன், பொத்தப்பிச் சோழன், இராஜராஜன் -1,3, விக்கிரமசோழன் ஆகிய சோழ அரசர்கள் காலத்தனவும், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் காலத்தனவும், கோப்பெருஞ்சிங்கன் காலத்தனவும், இராஷ்டிரகூட கன்னரதேவன் காலத்தனவும் ஆக அமைந்துள்ளன.

இறைவன் பெயர் வேதபுரீசுவரர் எனவும், ஓத்தூர் உடைய நாயனார் எனவும் வழங்கும். கோயில்வழிபாட்டிற்கும் நிவேதனத் திற்கும், அர்ச்சகர்க்கும் நிலமளித்த செய்திகளும், பூந்தோட்டத்திற்கு நிலமளித்த செய்திகளும் அறிவிக்கப்பெறுகின்றன. விளக்கிற்காகப் பசுக்கள் வாங்கி விடப்பெற்றமையைத் தெரிவிக்கின்றன. சிறப்பாக, விளையாட்டாக வேட்டைக்குச் சென்ற ஒருவன் எய்த அம்பு குறிதவறி ஒரு மனிதன்மேல் பட்டுவிட, அதற்காகத் திருஓத்தூர் சபையாரைக் கூட்டி, குற்றத்தைக் கூறி, சபை விதித்தவண்ணம் குற்றத்தண்டமாகக் கோயிலுக்கு 16 பசுக்களை வாங்கிக்கொடுத்து விளக்கிடச் செய்தான்.( 77 of 1900) விக்கிரமசோழன் (கி.பி. 1118-35) காலத்து வெள்ளம்புகுந்து விளைச்ச லழிந்ததால் குடிகளுக்கு வரிகட்ட முடியாமல்போக இரண்டாயிரம் குழி நிலத்தை 25 காசிற்கும், 4450 குழி புன்செய்யை 20 காசிற்கும் கோயிலுக்கு விற்று இறையிலி செய்தான்(87, 88), மூன்றாம் குலோத்துங்கன் பொன் ஆபரணங்கள் அளித்திருக்கின்றான். அதேகோயிலில் சிதம்ப ரேசுவர ஆலயம் ஒன்று இருப்பதாக அறியப்படுகிறது(100). கேதாரிநாதர் மடம் என்ற ஒன்று குறிப்பிடப் பெறுகிறது( 98 of 1910).

 
 
சிற்பி சிற்பி