கடம்பூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு சோதிமின்னம்மை உடனுறை அமிர்தகடேசவரர்


மரம்: கடம்ப மரம்
குளம்: சக்தி குளம்

பதிகங்கள்: வானமர்திங்களும் -2 -68 திருஞானசம்பந்தர்
தளருங் -5 -19 திருநாவுக்கரசர்
ஒருவராயிரு -5 -20 திருநாவுக்கரசர்

முகவரி: மேலக்கடம்பூர் அஞ்சல்
இரட்டியூர்
காட்டு மன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம், 608304
தொபே. 04144 264638

இருக்குமிடம்: சிதம்பரம் வட்டம் காட்டுமன்னார் கோயிலுக்கு 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரி வடகரைத் தலங்களுள் முப்பத்துநான்காவது ஆகும். சிதம்பரத்திலிருந்து காட்டு மன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் பேருந்தில் கடம்பூர் செல்லலாம். தேவாரப்பாடல் பெற்ற கோயில் மேலக்கடம்பூரில் உள்ளது.

ஊரின்பெயர் கடம்பூர் ஆயினும் இங்குள்ள கோயிலுக்குக் கரக்கோயில் என்று பெயர். இது ``தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்` என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியால் அறியக் கிடக்கின்றது.

இதன் உண்மைக்காரணத்தை ஆராய்ச்சியாளர் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள். புலப்படவில்லை. ``இத்தலத்தை வணங்கிய இந்திரன் இதனைத் தன் உலகத்திற்குக் கொண்டுபோக நினைத்துப் பாதாளம்வரை தோண்டியும் அஃது அப்பாலும் ஊடுருவிப்போனது கண்டு அஞ்சி, முன்போல அமைத்துப் பூசித்து அமிர்தம் உண்டாகும்படி வரம்பெற்றனன் என்ற வரலாறுகருதிக் கரக்கோயில் எனப்படும் என்பர் என்று திரு.C.K. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தாம் அருமையாக எழுதிய பெரியபுராண உரையில் குறித்திருக்கின்றார்கள்.(திருத்தொண்டர் புராணம் நான்காம் பகுதி. பக்கம் 287.) இறைவர் திருப்பெயர் அமிர்தகடேசர். இறைவியார் திருப்பெயர் சோதிமின்னம்மை. தேவேந்திரன் பூசித்துப் பேறுபெற்றான். இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.

கோயில் கர்ப்ப இல்லின் அடிப்பாகம் இரதவடிவில் குதிரைகள் பூட்டிய நிலையில் இருக்கின்றது.

கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி