கடவூர்மயானம் (திருக்கடவூர்மயானம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மலர்க்குழல் மின்னம்மை உடனுறை பெரியபெருமான் அடிகள்


மரம்: வில்வம்
குளம்: காசித்தீர்த்தம்

பதிகங்கள்: வரியமறை -2 -80 திருஞானசம்பந்தர்
குழைகொள் -5 -38 திருநாவுக்கரசர்
மருவார்கொ -7 -53 சுந்தரர்

முகவரி: திருக்கடவூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609311
தொபே. 04364 287222

சிவபெருமான் ஒரு கல்பத்தில் பிரமதேவரை எரித்து, நீறாக்கி அவரை மீளவும் உயிர்ப்பித்துப் படைப்புத்தொழிலை அருளிய தலமாதலின் மயானம் என்னும் பெயர் எய்திற்று என்பர். இதை இக்காலம் மெய்ஞ்ஞானம் என்று மக்கள் வழங்குகின்றனர். இது திருக்கடவூர்க்குக் கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் நாற்பத்தெட்டாவது ஆகும்.

எமவாதனையைக் கடத்தற்குரிய ஊர் ஆதலின் இப்பெயர் பெற்றது என்பர். (இவ்வூரில் திருக்கடவூர்-வீரட்டானம், திருக்கடவூர்-மயானம் என்னும் இரு (தேவாரம் பெற்ற) தலங்கள் இருக்கின்றன. அவற்றுள் திருக்கடவூர்-மயானம் என்பது பற்றியது ஈண்டுத் தரப்பட்டுள்ளது)

இறைவரது திருப்பெயர் பெரியபெருமான் அடிகள்; பிரமபுரீசர். இறைவியாரது திருப்பெயர் மலர்க்குழல் மின்னம்மை.

காசித்தீர்த்தம். இதிலிருந்துதான் திருக்கடவூர் வீரட்டானேசு வரருக்கு நாடோறும் திருமஞ்சனம் கொண்டுவரப்படுகிறது. பங்குனி மாதம் சுக்கிலபட்சம் அசுவதி நட்சத்திரத்திலே இத்தீர்த்தத்தில் மக்கள் மிகுதியாக வந்து நீராடுகின்றனர்.

பிர்மதேவர் பூசித்தது. இது மூவர்களாலும் பாடப்பெற்றது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.



கல்வெட்டு:

இவ்வூரில் பதினாறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. பதினைந்து, சோழர்களுடையனவும், ஒன்று, பாண்டியனுடையதுமாம். சோழர்கள் பிற்காலச் சோழர்களே. (கி.பி.12.13 நூற்றாண்டினர்). வீணை வாசிக்க. வேதம் ஒத, ஸ்ரீ ருத்திரம் சொல்லத் திட்டம் செய்யப்பட்டது. சுங்கம் தவிர்த்த குலோத்துங்கன் பதினாறாம் நூற்றாண்டில் நிலம் அளக்கப்பட்டது. தீர்வை விதிக்கப்பட்டது. நந்தவனம் வைப்பதற்குத் தோட்டத்திற்கு ஆள் நியமனம் செய்யப்பட்டது.

ஊர்: ஜெயங்கொண்ட சோழவளநாடு, ஆக்கூர்நாடு, திருக்கடவூர் என்று குறிக்கப்பட்டது. இந்நாட்டில் திருத்தொண்டத் தொகை மங்கலம், சிவபாதசேகர மங்கலம், திருநீற்றுச்சோழமங்கலம் என்ற ஊர்கள் கூறப்பட்டுள்ளன. சுவாமிபெயர் திருமயானமுடைய பெருமான் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
சிற்பி சிற்பி