கயிலாயம் (திருக்கயிலாயம்) (நொடித்தான்மலை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பார்வதி உடனுறை கயிலாயநாதன்


குளம்: கங்கை

பதிகங்கள்: பொடிகொளு -1 -68 திருஞானசம்பந்தர்
வாளவரி -3 -68 திருஞானசம்பந்தர்
மண்ணதுவுண் -3 -109 திருஞானசம்பந்தர்
கனகமாவயிரமு -4 -47 திருநாவுக்கரசர்
வேற்றாகி -6 -55 திருநாவுக்கரசர்
பொறையுடைய -6 -56 திருநாவுக்கரசர்
பாட்டான -6 -57 திருநாவுக்கரசர்
தானெனைமுன் -7 -100 சுந்தரர்
திருமாலும் நான்முக -11 -8 சேரமான்பெருமாள்
சொல்லும் பொருளுமே -11 -9 நக்கீரதேவர்

முகவரி: மானசரோவர்
திபெத்து மாநிலம்
சீனா நாடு

இது இமயமலைச் சிகரத்தில் இருக்கிறது. வடநாட்டுத் தலங்களுள் ஒன்று. நொடித்தான்மலை என்றுங் கூறப்பெறும். (நொடித்தல் - அழித்தல்) அழித்தல் தொழிலை உடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது. நொடித்தான் மலை என்னும் இப்பெயர் சுந்தரர் தேவாரத்தில்தான் காணப்பெறுகின்றது. சம்பந்தரும், அப்பரும் இதைக் கயிலாயம் என்றே பாடியுள்ளனர். இது பூ கயிலாயம் எனவும் பெயர்பெறும். இறைவனது இருப்பிடமாய் எங்கும் பரவியுள்ள அருவமாகிய கயிலாயம் வேறு. இப்பூ கயிலாயம் தேவர்களாலும் சென்று அடைதற்கரியது. இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது. இறைவன் தன் கால்விரலால் அழுத்த மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை உணர்ந்து வழிபட்டு வரங்கள் பெற்றதும்; இங்கு இறைவனது திருக்கோலத்தைக் காண வேண்டி வந்த அப்பர் பெருமானின் கால்கள், கைகள் மார்பு இவைகள் தேயப்பெற்றுச் செயலற்றுக் கிடந்த நிலையில், இவரது உறுதிப்பாட்டை அறிந்து இறைவன் காட்சி தந்தருளி ஒரு திருக்குளத்தைக்காட்டி அதில் மூழ்கி, ஐயாற்றில் எழுந்தருளித் தன் கோலத்தைக் காணுமாறு திருவாய் மலர்ந்தருளப்பெற்றதும், திருஞான சம்பந்தரால் திருக்காளத்தியிலிருந்தே பாடப்பெற்றதும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை, குதிரை இவைகளின் மீது வந்து கணநாதர்களாய் எழுந்தருளப் பெற்றதும், சேரமான்பெருமாள் நாயனாரால் ஆதியுலா பாடப் பெற்றதும், பிறவும், இத்தலத்தின் சிறப்புக்களாகும்.

இறைவன் திருப்பெயர் -கயிலாயநாதன். இறைவி திருப் பெயர் - பார்வதி. தீர்த்தங்கள் - கங்கை முதலியன. இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசர் பதிகங்கள் நான்கு, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம் ஒன்று ஆக ஏழு பதிகங்கள் இருக்கின்றன.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி