அம்பர்ப்பெருந்திருக்கோயில்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பூங்குழல்நாயகி உடனுறை பிரமபுரிநாதர்

மரம்: புன்னை
குளம்: பிரம தீர்த்தம்

பதிகம்: எரிதரவன -3 -19 திருஞானசம்பந்தர்

முகவரி: அம்பல் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம், 609503
தொபே. 04366 238973

இது பூந்தோட்டம் தொடர் நிலையத்திற்குக் கிழக்கே 5 கி.மீ. தூரத்திலிருக்கும் அம்பர் மாகாளத்திற்குக் கிழக்கே, 1 கி.மீ. தூரத்திலிருக்கிறது. காவிரியின் தென்கரைத் தலங்களுள் 54ஆவது ஆகும். பூந்தோட்டத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

பெருந்திருக்கோயில் என்பது யானை ஏற முடியாதவாறு படிக்கட்டுக்கள் அமைத்துச் செய்குன்றுபோல் கட்டப்பெற்றதாகும். இது மாடக்கோயில் என்றும் வழங்கப்பெறும். (நன்னிலத்துப் பெருங் கோயில், வைகல் மாடக்கோயில் இவைகளின் அமைப்பு முறைகளை நோக்குக) இத்தகைய கோயில்கள் கோச்செங்கட் சோழநாயனாரால் கட்டப்பெற்றன.

சைவசமய குரவராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் காலத்தில் (கி. பி. ஏழாம் நூற்றாண்டில்) இவ்விதக்கோயில்கள் எழுபத்தெட்டு இருந்தன.

இச்செய்தி ``பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் உறையும் பெருங்கோயில் எழுபதினோடெட்டும்`` என்னும் அவரது கேஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகப் பதிக அடிகளால் விளங்குகிறது.

இங்ஙனம் கோச்செங்கட் சோழநாயனாரால் கட்டப்பெற்றவைகளுள் அம்பர்ப்பெருந் திருக்கோயிலும் ஒன்றாகும். இச்செய்தியை ஞானசம்பந்தப் பெருந்தகையார் `குரிசில் செங்கண்ணவன் கோயில்` `செங்கண் நல்லிறை செய்த கோயில்` `செம்பியர் செறிகழல் இறை செய்த கோயில்` என இவ்வூர்ப்பதிக அடிகளில் கூறியுள்ளனர். எனவே அம்பர் என்னும் ஊரில் யானை ஏற முடியாதவாறு படிக்கட்டுக்கள் அமைத்துச் செய்குன்றுபோல் கோச்செங்கட் சோழ நாயனரால் கட்டப்பெற்ற காரணம் பற்றி அம்பர்ப்பெருந்திருக்கோயில் என்னும் பெயர் பெற்றது.

இது சோமாசி மாற நாயனார் அவதரித்த திருப்பதி. இத்தலத்தை ஞானசம்பந்தர் மாத்திரமே பாடியிருக்கின்றனர். அவருடைய பதிகமும் ஒன்று மட்டுமே.(அரசிலாறு)

அரிசிலம் பொருபுனல் அம்பர்` (அரிசில் - அரிசிலாறு) `அறைபுனல் நிறைவயல் அம்பர்` `அங்கணி விழவமர் அம்பர்` `பைம்பொழில் நிழல்வளர் நெடுநகர்` என்னும் ஞானசம்பந்தரது திருப்பதிக அடிகளால் இவ்வூரின் சிறப்பு நன்கு விளங்கும். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இத் தலத்திற்குப் புராணம் பாடியுள்ளார்.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றுள் சோமாஸ்கந்தர் கோயிலில் இருக்கும் இராஜராஜ தேவரின் பத்தாமாண்டுக் கல்வெட்டு நீங்கலாக ஏனையவை துண்டு துண்டான கற்களில் வெட்டப்பெற்றனவாகும். மேற்குறித்த இராஜராஜ தேவரின் கல்வெட்டு உய்யக்கொண்டார் வளநாட்டு, அம்பர் நாட்டு வைகாவூராகிய எதிரிலிச் சோழநெற்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் எதிரிலிச்சோழீச்சர முடையார்க்கு அம்பர் என்னும் இவ்வூரிலுள்ள ஒரு வணிகன் இரண்டு விளக்குகள் கொடுத்ததைத் தெரிவிக்கின்றது.

ஏனைய துண்டுக் கல்வெட்டுக்கள் இராஜராஜ தேவரின் ஐந்து, ஒன்பது இராச்சிய ஆண்டுகளில் நிலங்கள் ஏலத்திற்கு விடப்பட்டதையும், மூன்றாங்குலோத்துங்க சோழன். மதுரையும், ஈழமும், கருவூரும், பாண்டியன் முடித்தலையும் கொண்டதையும், அம்பர் நாட்டில், மேலூராகிய அரித்துவநெற்குன்றம் என்னும் ஊர் உள்ளதையும் தெரிவிக்கின்றன.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1917. Numers 236 - 239.)

 
 
சிற்பி சிற்பி