கருக்குடி (திருக்கருக்குடி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சுரும்பார்குழல் அரிவை உடனுறை சற்குணநாதர்


மரம்: வில்வம்
குளம்: எம தீர்த்தம், காவிரி

பதிகம்: நனவிலுங் -3 -21 திருஞானசம்பந்தர்

முகவரி: மருதாந்த நல்லூர் அஞ்சல்
திப்பிராசபுரம்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612402
தொபே. 0435 2414388

கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 5. கி.மீ. தூரத்திலுள்ள கலயநல்லூர்க்குத் (சாக்கோட்டைக்கு) தென்கிழக்கில் 1.5. கி.மீ.தூரத்தில் இருக்கிறது. இது மருதாந்தநல்லூர் என்று வழங்கப் பெறுகின்றது. காவிரியின் தென்கரைத் தலங்களுள் 69 ஆவது ஆகும்.

இறைவர் திருப்பெயர் - சற்குணநாதர். இவர் திருமேனி மணலால் ஆக்கப்பெற்றது. இறைவி திருப்பெயர் - சுரும்பார்குழல் அரிவை. இத்திருப்பெயரை ஞானசம்பந்தர் இவ்வூர்ப் பதிகம் மூன்றாம் திருப்பாட்டில் எடுத்து ஆண்டிருக்கின்றார். பிரமனும், இராமனும், சற்குணன் என்னும் அரசனும் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். ஒரு வணிகன் அறியாது தன் தாயாருடன் புணர்ந்த குற்றம் நீங்கப்பெற்ற பதி.

இவ்வூர்க் கோயிலில் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவனின் இரண்டாமாண்டில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இருக்கின்றது. இக்கல்வெட்டில் சிவபெருமானின் திருப்பெயர் விழுமியநாயனார் எனக்குறிக்கப்பெற்றுள்ளது. சென்னிமங்கலத்து விசுவேசுவரர்கோயிலின் தேவரடியாராகிய கரையேறவிட்டாள் திருநட்டப்பெருமாள் என்னும் அம்மையார் இத்திருக்கருக்குடி கோயிலில் திருவாதவூர் நாயனாரை எழுந்தருளுவித்து அவர்க்கு நாள்வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்ததை இக்கல்வெட்டுக் கூறுகின்றது. இவ்வூர் குலோத்துங்சோழ வளநாட்டுத் திருநறையூர் நாட்டுக்கு உட்பட்டிருந்தது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி