கருகாவூர் (திருக்கருகாவூர்)
இக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535,
5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
இக்கோயிலின் படம் மூடுக / திறக்க
அருள்மிகு கரும்பனையாள் உடனுறை முல்லைவனேசுவரர்
மரம்: முல்லைக்கொடி குளம்: பாற்குளம்
பதிகங்கள்: முத்திலங்கு -3 -46 திருஞானசம்பந்தர்
குருகாம் -6 -15 திருநாவுக்கரசர்
முகவரி: முல்லைவனநாதர் திருக்கோயில் அஞ்சல் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம், 614302 தொபே. 04374 273423
ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு இத்தலத்து இறைவி மருத்துவம் பார்த்துக் கருவைக் காத்தபடியால் கருகாவூர் என்னும் பெயர் எய்திற்று. இது இக்காலம் திருக்களாவூர் என்று வழங்கப்பெறுகின்றது. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாவநாசம் ரயில்வே நிலையத்திற்குத் தெற்கே 6. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஐயன்பேட்டை தொடர்வண்டி நிலையத்திலிருந்தும் போகலாம். கும்பகோணம், பாவநாசம் ஆகிய ஊர்களிலிருந்து திருக்கருக்காவூர் செல்லப் பேருந்துகள் பல உள்ளன.
தலப் பிள்ளையார் - கற்பகப் பிள்ளையார். இறைவர் திருப்பெயர் - முல்லைவனேசுவரர். மணலால் ஆக்கப்பெற்றிருக்கும் இறைவர் திருமேனியில் முல்லைக்கொடி சுற்றியிருக்கும் அடையாளம் இருப்பதால் இப்பெயர் பெற்றார்.
இறைவியின் பெயர்: (1) கர்ப்பரட்சகி. ஆதரவற்ற ஒரு பெண்ணிற்கு மருத்துவம் பார்த்துக் கருவைக்காத்து அருளியமையால், இப்பெயர் பெற்றார்.
(2) கரும்பனையாள். தீர்த்தம் - பாற்குளம். தலமரம் - முல்லைக்கொடி. இறைவர் திருமேனி மணலால் ஆக்கப்பெற்றது. சந்திரன் வழிபட்ட தலம். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.
இவ்வூர்க் கோயிலில் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதற் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், இவர்கள் காலங்களில் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர், திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லை வனமுடையமாதேவர் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர்.
இக்கோயில் கல்வெட்டுக்களில், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மரின் கல்வெட்டு, இவ்வூரை, வடகரை பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கில் பால் கருகாவூர் என்றும், முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டு நித்த விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் என்றும் குறிப்பிடுகின்றன. குடமூக்கு என்பது கும்பகோணமாகும். அதன்பால் இக்கருகாவூர் இருப்பதாக மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மன் கல்வெட்டுக் கூறுவதால், அக்காலம் சிறப்புடைய ஊரைச்சொல்லி அதன் பக்கத்தில் இருக்கும் ஊரைக் குறிப்பிடுவது மரபு என்று தெரிகின்றது. ``ஒரு நொந்தா விளக்கினுக்கு நந்திபுரத்து வியாபாரி சாமுண்டன்மூர்த்தி கருகாவூர் நிலம் நான் விலைகொண்ட நிலம் இவ்வூர் உட்பலாற்றின் வடவாய் ஒரு முக்காணியும்`` என்றும் இக்கோயிலிலுள்ள மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மரின் கல்வெட்டுப் பகுதியால், அக்காலம் இவ்வூர்க்கு அருகில் ஓடிய ஆறு உட்பலாறு (உப்பனாறு?) என்னும் பெயருடன் விளங்கிற்று என்பதும் புலனாகின்றன. (இக்காலம் ஓடும் ஆறு வெட்டாறாகும்.) இக்கல்வெட்டுப் பகுதியில் குறிக்கப்பெற்ற நந்திபுரம் என்பது திருப்பட்டீச்சுரத்துக்கு அண்மையில் உள்ள இராமநாதன் கோயிலாகும்.
இத்திருக்கருகாவூர்க் கோயில் கல்வெட்டுக்கள் அனைத்தும் இறைவர்க்குத் திருவமுதுக்கும் திருநுந்தாவிளக்கினுக்கும் நிலம்விட்ட செய்திகளைக் குறிப்பிடுகின்றன. இவ்வூரில் சபை ஒன்று இருந்தது. அதற்குக் கருகாவூர்ச் சபை என்று பெயர். இக்கோயில் கல்வெட்டுக்களில் காணப்பெறும் காப்புரைகள் ``இது ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் என்றலைமேல். இவை பன்மாஹேஸ் வரரும், பன்மாகேஸ்வரப் பெருமக்களும் ரகை்ஷ``. ``ரக்ஷிப்பார் இவ்வூர் ஆயிரந் திருவடியுமிவர்கள் ஸ்ரீ பாதத்தூளி என்றலைமேலன`` என்பனவாகும். (See the South Indian Inscriptions, Volume III, Part III, No. 100, 102 and 110.)
கல்வெட்டு:
|