கருவூர்த்திருவானிலை (திருக்கருவூர்த்திருவானிலை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சர்வாங்க நாயகி உடனுறை சற்குணநாயகர்


மரம்: வில்வம்
குளம்: பிரம தீர்த்தம்

பதிகம்: தொண்டெலா -2 -28 திருஞானசம்பந்தர்

முகவரி: கரூவூர்
கரூர் வட்டம்
கரூர் மாவட்டம், 639001
தொபே. 04324 262010

ஊரின்பெயர் கருவூராயினும் இங்குள்ள கோயிலுக்குத் திருவானிலை என்று பெயர். காமதேனு பூசித்தகாரணம்பற்றி இப் பெயர்பெற்றது. திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 52 கி.மீ. தூரத்தில் இருக்கிறது திருச்சிராப்பள்ளி - கரூர் இரயில் வசதியும் உள்ளது. இது கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழனுள் ஒன்று.

தொழில் வளர்ச்சி பெருகிய பெருநகர்களில் ஒன்றான இவ்வூருக்குத் திருச்சி, கோவை, ஈரோடு, முதலான பல நகரங்களிலிருந்தும் பேருந்துகளில் செல்லலாம். இறைவரின் திருப்பெயர் பசுபதீசுவரர். இறைவியாரின் திருப்பெயர் கிருபாநாயகி. தீர்த்தம் ஆம்பிராவதி ஆறு.

இது சோழமன்னர் முடிசூட்டிக்கொள்ளும் பதிகள் ஐந்தனுள் ஒன்று. புகழ்ச்சோழர் ஆட்சிசெலுத்திய இடம். எறிபத்தநாயனார் சிவகாமியாண்டார் இவர்கள் இருந்தபதி. திருவிசைப் பாக்களைப் பாடிய கருவூர்த்தேவரும் இவ்வூரினரே. இது ஞானசம்பந்தரால் பாடப்பெற்றது. அவருடைய ஒரே பதிகத்தைப்பெற்றது. இருபத்தொரு சருக்கங்களையும் ஆயிரத்துநூற்றிருபத்தொன்பது திருவிருத்தங்களையும் கொண்ட புராணம் ஒன்று உள்ளது. அதை ஆக்கியோர் இன்னா ரென்று புலப்படவில்லை. கோயமுத்தூர், வித்துவான், திரு. கந்தசாமி முதலியார் அவர்கள் பல ஆண்டுகளுக்குமுன் அச்சிட்டு வெளியிட்டனர்.



கல்வெட்டு:

இக்கோயிற் சுவர்களில் பதினேழு கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் ஆறு படி எடுக்கப்பட்டன. அவைகளில் ஒன்று தவிர மற்றவை 11, 12, 13ஆம் நூற்றாண்டுச் சோழர்களின் கல்வெட்டுக்களேயாம். இவை மெய்க்கீர்த்திகள், அரசருடைய பெயர்கள் இவற்றைக் காட்டுகின்றன. இறை, புரவு, சிற்றாயம், எலவை, உடைமை, தெண்டகுற்றம் முதலிய அக்காலத்து வரிப் பெயர்களைக் காட்டுகின்றன. அரசரின் ஆணைகள் எழுதும் விவரம் அரசனுடைய அலுவலாளர்களின் பெயர்கள் முதலியனவும் காணலாம். நன்மை தீமைகளுக்கு இரட்டைச்சங்கு ஊதி, பேரிகை கொட்டி, பாதரட்சையிட்டு, வீடுகளுக்குச் சாந்து பூசிக்கொள்ள அரசன் ஆணை கொடுக்கப்பட்டது.

கல்வெட்டுக்களில் இறைவர் திருவானிலை ஆளுடையார் என்னும் திருப்பெயரால் கூறப்பெற்றுள்ளனர். விக்கிரமசோழன் காலத்தில் இவ்வூர் வீரசோழமண்டலத்து வெங்காலநாட்டுக்கும், மூன்றாங்குலோத்துங்கசோழன் காலத்துச் சோழகேரளமண்டலத்து வெங்காலநாட்டுக்கும் உட்பட்டிருந்தது. மூன்றாங்குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கருவூர் முடிவழங்கு சோழபுரம் என்னும் பெயரையும் பெற்றிருந்தது. மூன்றாங் குலோத்துங்கசோழன் திருவானிலை ஆளுடையாருக்கு வெங்காலநாட்டுத் தட்டையூர் நாட்டுக் கேரளபள்ளியிலும், மன்றையிலும் ஐம்பதுவேலி நிலத்தைத் திருநாமத்துக்காணியாகக் கொடுத்திருந்த செய்தி அறியப்படுகின்றது.

``திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்`` எனத் தொடங்கும் மெய்க் கீர்த்தியையுடைய ஸ்ரீ இராசேந்திரசோழ தேவரின் கல்வெட்டு வெங்காலநாட்டு நெல்வாய்ப்பள்ளியில் பூசைக்கும் திருப்பணிக்கும் நிலம் அளிக்கப்பெற்றதைக் குறிப்பிடுகின்றது. வீரராசேந்திரசோழன் பாக்கூரிலும் திருநாமத்துக்காணியாக நிலம் கொடுத்திருந்தான். கோனேரின்மை கொண்டான் அந்தனூரான வீரசோழநல்லூரை உவச்சர், தேவரடியார், தவசியர் இவர்களுக்காக அளித்திருந்தான்.

(See the South Indian Inscriptions, Volume II Part I page 43. Also see the Annual Reports on South Indian Epigraphy for the year 1890, No. 58-66, year 1905 No. 135-142, year 1936 No. 165-168.)

 
 
சிற்பி சிற்பி