அம்பர்மாகாளம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பட்சநாயகி உடனுறை காளகண்டேசுவரர்

மரம்: மருத மரம்
குளம்: மாகாளதீர்த்தம்

பதிகங்கள்: அடையார் புரமூன்று -1 -83 திருஞானசம்பந்தர்
புல்குபொன் -2 -103 திருஞானசம்பந்தர்
படியுளார் -3 -93 திருஞானசம்பந்தர்

முகவரி: பூந்தோட்டம் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம், 609503
தொபே. 9486601401

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். மயிலாடுதுறை திருவாரூர் வழியில் பூந்தோட்டத்திலிருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

இத்தலம் கோயில் திருமாகாளம் என வழங்கும். அம்பன், அம்பாசூரன் இருவரையும்கொன்ற காளி பாவந்தீர இறைவனை இத்தலத்துப் பூசை செய்தாள்.

மாகாளரிஷியும் பூசித்த தலம். காளிகோயில் தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. வைகாசி மாதத்தில் சோமாசிமாறர் யாக உற்சவம் நடைபெறும்.

சிறிய உருவமுடைய பாணலிங்கம். குவளை சாத்தப்பட்டுள்ளது. சோமாசிமாற நாயனார் யாகஞ்செய்த தலம். இத்தலம் பேரளம் திருவாரூர் மார்க்கத்திலுள்ள பூந்தோட்டம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.


கல்வெட்டு:

இத்தலம் முதற்குலோத்துங்கன் காலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் திருமாகாளம் என வழங்கப்பெற்றது(93of1910). இராஜகேசரிவர்மனான குலோத்துங்கன் காலத்து, பூபாலகுலவல்லி வளநாட்டு அம்பர்நாட்டு அம்பர் மாகாளம் எனவும்(107 of 1910) வழங்கப் பெற்றது.

இறைவன் திருமாகாளம் உடையார்(107 of 1910), திருமாகாளத்து மகாதேவர்(116 of 1910) என வழங்கப்பெறுகிறார். கோயிலுக்கு முதற்குலோத்துங்கன் காலத்து நுளம்பராசன் வேண்டுகோளுக்காக மாத்தூர் திருச்சிற்றம் பலநந்தராசனால் புரவுவரி விளாகம் என்ற கிராமம் கோயிலுக்கு அளிக்கப்பெற்றது(94 of 1910).

மேலும் அவனது ஆட்சி 42- ஆம் ஆண்டில் வேதந்தூர் என்ற கிராமத்தை அம்பர் உதயமார்த்தாண்டன் அளித்திருக்கிறான்(95 of 1910).

சேக்கிழான்வேளான் திருவாய்க்குலமுடையான் எயினிகுடி கிராமத்தை அளித்தான். முன்னரே அதை அநுபவித்துவந்த காணியாளரைத் தள்ளிவிட்டுப் புதிதாகப்பயிர் செய்ய ஏற்பாடு செய்தான். விக்கிரமசோழன் காலத்தில் (கி.பி. 1118-35) நிலமளித்த செய்தி அறியப்பெறுகிறது.

சிறப்பாக ஆட்கொண்ட நாயகனையும் அம்மையையும் கோயிலுக்கு வார்த்துக்கொடுத்து, திருவமுதுக்கு க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுப் பனையூர் நாட்டுச் சிறுவேலூரானான அமுதன் திருச்சிற்றம்பலமுடையான் உதயமார்த்தாண்ட மூவேந்த வேளான் நிலமுமளித்தான்.

அதே அம்மைக்கு மற்றோர் சிறுவேளூர் உடையான் நிலமுமளித்திருக்கிறான். இந்த ஆட்கொண்டநாயகர் என்பது சோமாஸ்கந்தரின் பெயர்போலும். இவரைப்பற்றி விக்கிரமசோழன் காலத்துக் கல்வெட்டும் அறிவிக்கிறது (108 of 1910).

இறைவனுக்கு முத்துக் கழுத்தணி, வைரமுடி இவற்றைக் காரிபுலியனான சோழமாராயன் அளித்தான், விக்கிரமசோழன் திருமாளிகைப் பத்தியைக் கட்டினான்(99 of 1910). மற்றும் விளக்கிற்காகவும், விழாவிற்காகவும் பொன்னும், நிலமும் அளித்த செய்தியை அறிவிக்கின்றன. முதுபகவர் என்ற கோயிலொன்று குறிப்பிடப்படுகிறது(111 of 1910).

உமாபரமேஸ்வரி காளி அம்மையாக இருத்தல்வேண்டும். இதனை அமைத்தவன் விக்கிரமசோழன். பூசைக்கும் அமுதுக்குமாக நிலம் வழங்கியிருக்கிறான். இராஜேந்திரசோழனும் அக்கோயிலுக்கு நிலம் வழங்கினான்(100, 101 of 1910).

 
 
சிற்பி சிற்பி