கன்றாப்பூர் (திருக்கன்றாப்பூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு மாதுமையம்மையார் உடனுறை நடுதறியப்பர்


மரம்: கல்பனை
குளம்: சிவகங்கை

பதிகம்: மாதினை -6 -61 திருநாவுக்கரசர்

முகவரி: கண்ணாப்பூர் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610207
தொபே. 04366 204144

நாகை மாவட்டத்தில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலைக்கு வடகிழக்கே சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திலிருக்கிறது.

ஊர்க்கும் இறைவர்க்கும் முறையே கன்றாப்பூர், நடுதறியப்பர் எனப் பெயர் ஏற்பட்டமைக்குக் காரணம்: சைவர் குடியில் தோன்றிய ஒரு பெண்ணை, அவரது பெற்றோர் வைணவர் ஒருவர்க்குத் திருமணஞ் செய்துகொடுத்தனர். அப்பெண் மாமியார் வீட்டார்க்குப் புலப்படாதவாறு கன்றுக்குட்டி கட்டியிருக்கும் முளையையே சிவலிங்கமாகப் பாவித்து வழிபட்டுவந்தனர். ஒரு நாள் கணவன் அதைக்கண்டு அம்முளையைக் கோடாலியால் வெட்ட இறைவர் அம்முளையிலிருந்து வெளிப்பட்ட காரணத்தால் அவர் நடுதறியப்பர் என்னும் பெயர் எய்தினார். ஊரும் கன்றாப்பூர் என்னும் பெயர் எய்திற்று.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி