காறாயில் (திருக்காறாயில்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கயிலாயநாயகி உடனுறை கண்ணாயிரநாதர்


மரம்: வன்னி
குளம்: இந்திர தீர்த்தம்

பதிகம்: நீரானேநீள் -2 -15 திருஞானசம்பந்தர்

முகவரி: காறைவாசல் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610202
தொபே. 04366 316222

திருவாரூர்க்குத் தெற்கே சுமார் 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் நூற்றுப் பத்தொன்பதாவது. திருவாரூரிலிருந்து கச்சனம் திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

இறைவரது திருப்பெயர் கண்ணாயிரநாதர். இறைவியாரது திருப்பெயர் கைலாசநாயகி. சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று.

தீர்த்தம் இந்திரதீர்த்தம். இது கோயிலுக்கு வடபுறத்தில் இருக்கிறது.

இத்தீர்த்தத்தின் வடகரையில் கடுக்காய்ப்பிள்ளையார் கோயில் இருக்கின்றது. ஒரு வியாபாரி ஜாதிக்காய் மூட்டைகளைக் கடுக்காய் மூட்டைகள் எனக் கூற, இப்பிள்ளையாருடைய திருவிளையாடலால் அவைகள் கடுக்காய் மூட்டைகள் ஆயின. பின் வணிகனின் வேண்டுகோளின்படி அவைகள் முன்போலவே ஜாதிக்காய்கள் ஆயின. ஆதலால் அப்பிள்ளையார்க்கு அப்பெயர் வந்தது என்பர்.

இது முசுகுந்த சக்கரவர்த்தி தேவேந்திரனிடம் பெற்றுக் கொண்டு வந்த தியாகேசர் திருமேனிகள் ஏழனுள் ஒன்றை எழுந்தருளுவித்த சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். தேவேந்திரன், முசுகுந்த சக்கரவர்த்தி என்பவர்கள் பூசித்த பதி. புரட்டாசி மாதம் பௌர்ணமியே தேவேந்திரன் பூசித்த நாளாகும் என்பர். அன்று அப்பூசையை மக்கள் நடத்தி வருகின்றனர். இது ஞானசம்பந்தரால் பாடப்பெற்றது. அவருடைய பதிகம் ஒன்றை உடையது.

இக்கோயிலின் அருகே வெள்ளையாறு ஓடுகிறது. கோயிலின் பரப்பளவு 115`-172` ஆகும். பெரும்பாதை ஒன்று கோயிலுக்குப் பின்புறம் செல்லுகிறது.



கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் இராஜகேசரிவர்மன் இராஜரஜசதேவரின் 27-ஆம் ஆண்டு, பரகேசரிவர்மன் இராசேந்திர சோழதேவரின் மூன்றாம் ஆண்டு, திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் இருபத்தெட்டாம் ஆண்டு ஆகிய இக்காலங்களில் பொறிக்கப்பெற்ற நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக் கல்வெட்டுக்கள் ஒரு தோப்பில் உள்ள மூன்று தூண்களிலும், மற்றொரு கல்வெட்டுக் கோயிலுக்குப் பக்கத்திலும் உள்ளன. இக் கல்வெட்டுக்களில் இறைவர் திருக்காறாயில் மகாதேவர் என்னும் பெயரால் கூறப்பெற்றுள்ளார்.

இக்கோயில், திருவோலக்கத் திருமண்டபம் முதலாம் இராசராச சோழனின் இருபத்தேழாம் ஆண்டில் கட்டப்பெற்றது என்றும், இவ்வூர் அருண்மொழித்தேவ வளநாட்டுப் புலியூர்நாட்டைச் சேர்ந்தது என்றும், இக்கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. திருபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜ தேவரின் இருபத்தெட்டாம் ஆண்டுக் கல்வெட்டு இக்கோயில் திருக்கைகொட்டியிலிருந்து ``திருமுறை பாடுவார்க்கு`` நிவந்தம் அளிக்கப்பெற்ற செய்தியை அறிவிக்கின்றது. தேவாரங்களுக்குத் திருமுறை என்ற பெயர் இக்கல்வெட்டில் குறிக்கப் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கதாகும். இராஜராஜனது 3-ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 988) இறைவனுக்காக 35மா நிலம் ஊர்ச்சபை யாரால் வாங்கப்பட்டது.

இராஜேந்திரன் 3ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1012) ஆராதனைக்காக ஒரு நிலம் கோயிலுக்கு வாங்கித் தரப் பட்டது. இரண்டாம் இராஜராஜன் காலத்தில் (22-7-1943) இக் கோயிலின் திருக்கைக் கொட்டி மண்டபத்தில் திருமுறைகள் வாசிக்கும் ஓதுவார்களின் உணவிற்காக நிலம் தரப்பட்டது. ``திருமகள் போல``, ``திருமன்னிவளர`` என்ற மெய்க் கீர்த்திகள் உள்ளன.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1909, No. 451-454 page 49.)

 
 
சிற்பி சிற்பி