கீழ்வேளூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வனமுலைநாயகி உடனுறை கேடிலியப்பர்


மரம்: இலந்தை
குளம்: சரவணப்பொய்கை

பதிகங்கள்: மின்னுலாவிய -2 -105 திருஞானசம்பந்தர்
ஆளான -6 -67 திருநாவுக்கரசர்

முகவரி: கீவளூர் அஞ்சல்
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 611104
தொபே. 04366 276733

வேள் (முருகப்பெருமான்) வழிபட்ட காரணத்தால் இப்பெயர் பெற்றது.

இது காவிரித் தென்கரைத் தலங்களுள் எண்பத்துநான்காவது ஆகும். கீழ்வேளூர் தொடர்வண்டிநிலையத்திற்கு வடக்கே 1.5.கி.மீ. தூரத்தில் இருக்கிறது. திருவாரூரிலிருந்து நாகை செல்லும் பேருந்து வழியில் உள்ளது. நகரப் பேருந்துகளும் உள்ளன.

இறைவரது திருப்பெயர் கேடிலியப்பர். இப்பெயர் இவ்வூர்த் திருத்தாண்டகத்துள் எடுத்தாளப்பட்டுள்ளது. இறைவியாரது திருப் பெயர் வனமுலைநாயகி.

இத்திருப்பெயரை ஞானசம்பந்தப் பெருந்தகையார் இவ்வூர்ப்பதிகம் இரண்டாம் திருப்பாட்டில் ``வாருலாவிய வனமுலையவ ளொடு`` என்று எடுத்து ஏத்தியிருப்பது பெருமகிழ்ச்சிக்கு உரியதாகும்.

தீர்த்தம் சரவணப்பொய்கை. முருகவேள் பூசித்துப் பேறுபெற்ற பதி. அவருடைய பூசைக்கும் தவத்துக்கும் கெடுதியுண்டாகாதவாறு இறைவியார் துர்க்கையின் அம்சமாகக் காவல் பூண்டிருந்தார். அவர்க்கு அஞ்சு வட்டத்து அம்மை என்றுபெயர். அவருடைய திருக்கோயில் முதல் பிராகாரத்தில் வட பக்கத்தில் இருக்கின்றது. இச்செய்தி,
``மண்டுபே ரொளியான கேடிலியை
யர்ச்சித்த வள்ளிநாயகன் வருகவே
மாகாளிகாத்த கீழ்வேளூரில் மாதவம்
வளர்த்த வேலவன் வருகவே``
என்னும் இத்தலத்தைப்பற்றிய கே்ஷத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழால் அறியலாம். அகத்தியர்,
கூத்தப்பெருமானது வலத்திரு வடியைக்கண்டு தரிசித்த பதியும் இதுவேயாகும்.

குபேரனுக்குத் தனியாகக் கோயில் உள்ளமையால் அவனும் பூசித்துப் பேறுபெற்றிருக்கவேண்டும். இதற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு திருப்பதிகங்கள் இருக் கின்றன.

இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் ஞானசம்பந்தப் பெருந்தகையார் கூறியுள்ளார். எனவே, கோயில் இறைவனார் இறைவியார் திருப்பெயர்கள் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும்.



கல்வெட்டு:

இந்தக்கோயிலில் மூன்றே கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டன. 2 கல்வெட்டு சோழர்களினவும், 1 தஞ்சை மராட்டிய மன்னனதுமாகும். மூன்றாம் இராஜராஜன் தனது 18 ஆம் ஆட்சியாண்டில் (22-12-1233) இக்கோயிலுக்குப் பூதானம் செய்துள்ளான். அம்மன் கோயிலிலே அவருடைய பத்தாம் ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது. தஞ்சை துரைராஜ மகாராஜர் (கி.பி. 1763-87) இக்கோயிலின் பிராகார மதிலைக் கட்டினார்.

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் பத்து, பதினெட்டு இவ்வாண்டுகளில் பொறிக்கப்பெற்ற இரண்டு கல்வெட்டுக்களும் மகாராட்டிர மன்னரில் தஞ்சாவூர் துளசிராஜிராஜாவின் சகம் 1697 அதாவது கி.பி. 1775 இல் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் ஆக மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவற்றுள் துளசிராஜிராஜா கல்வெட்டு இக்கோயில் பிராகாரத்தின் சுவர்கள் அம்மன்னனால் கட்டப்பட்டதையும் ஏனைய இருகல்வெட்டுக்கள் நாள் வழிபாட்டிற்கு நிலம் அளித்த செய்தியையும் தெரிவிக்கின்றன.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1904, No. 515-517)

 
 
சிற்பி சிற்பி