குடமூக்கு (திருகுடமூக்கு)
இக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535,
5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
இக்கோயிலின் படம் மூடுக / திறக்க
அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை கும்பேசுவரர்
மரம்: வில்வம் குளம்: மகாமகத் தீர்த்தம்
பதிகங்கள்: அரவிரிகோடனீடல் -3 -59 திருஞானசம்பந்தர்
பூவணத்தவன் -5 -22 திருநாவுக்கரசர்
முகவரி: கும்பகோணம் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம், 612001 தொபே. 0435 2420276
இது கும்பகோணம் என்று வழங்கப்பெறுகின்றது. ஒரு பிரளய காலத்தில் எல்லா உயிர்களையும் ஒருசேரவைத்த குடத்தின் மூக்கு இருந்த இடமாதலின் இப்பெயர் பெற்றது என்பர்.
கும்பகோணம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 1.5. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இறைவர் திருப்பெயர் - கும்பேசர். இறைவி திருப்பெயர் - மங்களாம்பிகை. தீர்த்தம் - மகாமகத்தீர்த்தம். தம்மிடத்து மூழ்கினோருடைய பாவங்களை எல்லாம் போக்கவல்ல கங்கை முதலிய ஏழு பெருந்தீர்த்த மாதாக்களும் தங்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு இதில் வந்து நீராடும் பெருஞ்சிறப்பு டையது. இது பற்றி, ``பூமருவு கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம் மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடுங்கோயில்`` எனச் சேக்கிழார் கூறியிருத்தலுங் காண்க. திருமால் பூசித்துச் சார்ங்கமும் சக்கரமும் பெற்றனர். கும்பேசுவரர்க்குச் சித்திரை மாதத்தில் ஏழூர்ப் பெருந்திருவிழா நடைபெறுகின்றது.
ஏழூர்களாவன:- கும்பகோணம், கலயநல்லூர், வலஞ்சுழி, தாராசுரம், சுவாமிமலை, கொட்டையூர்க் கோடீச்சுரம், மேலைக்காவிரி என்பன.
இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன. திருசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இத்தலத்திற்குப் தல புராணமும், மங்களாம்பிகைமீது பிள்ளைத்தமிழும் பாடியுள்ளனர். அவைகள் அச்சில் வெளிவந்துள்ளன.
சகம் 1476இல் (கி. பி. 1554) மகா மண்டலேஸ்வரன் குருராஜருத்திர தேவசோழ மகாராஜா, ஆதி கும்பேஸ்வரருக்குத் திருவமுதுக்கும், பிராமணர்களுக்கு அன்னம் அளிக்கவும், வயலூர் இளங்கட்டளைக் கிராமம் என்னும் இரு ஊர்களைக் கொடுத்துள்ளான். தஞ்சை நாயக்க மன்னரில் சேவப்ப நாயக்க ஐயன் காலத்தில், திருமலைராசபுரத்துப் பிராமணர்கள், தாங்கள் வாய்க்கால் ஒன்றை வெட்டிக்கொள்வதின் பொருட்டு, திருவாலந்துறை புத்தர் கோயிலுக்கு உரிய நிலத்தைப் பயன்படுத்திக் கொண்டதற்கு, அப்புத்தர் கோயிலுக்கு வேறு நிலம் விட்டதை உணர்த்துகின்றது.
கல்வெட்டு:
|