திருநாவுக்கரசு சுவாமிகள் திருவதிகை வீரட்டத்தி லிருந்து பல்லவ மன்னனைச் சைவனாக்கிய பின்னர்ப் பல தலங்களையும் வணங்க நினைந்து திருவெண்ணெய் நல்லூர் மேவியிறைஞ்சி. திருவாமாத்தூர் சென்று, பணிந்து பாடி யருளியது இத் திருப்பதிகம் (தி.12 திருநாவு. புரா. 148).
குறிப்பு: இத் திருப்பதிகம், கடவுள் வாழ்த்துப் பாடாண் பகுதியுள், கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கத்துப் பெருந்திணை வகையாக அருளிச் செய்யப்பட்டது. துறை, தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம்.
அஃதாவது. ஆமாத்தூர் இறைவர் பிச்சைக்கு வர, பிச்சை இடச் சென்று அவரை எதிர்ப்பட்டு, வேட்கை தோன்றி, அவரது நோக்கினைத் தெளிந்து, தனது நோக்கினால் உடம்பட்டு அவர்க்கு உரியவள் ஆயினாள் ஒருத்தி. பின்பு அவர் தன்னை வரையாது நீங்குதல் கண்டு தெளிவொழிந்து, பலரொடும் முறையிட்டு அவரைக் கூட்டுவிக்குமாறு வேண்டியது.
பேதைமை காரணமாகப் பொருளல்லவற்றையே (உலகத்தை யும் தம்மையுமே) பொருளென்றுணரும் மருள்நிலை தவங்காரணமாக நீங்கி அருள்நிலை எய்திய ஞான்று, இறைவன் வெளிநின்று அருள் வழங்கப் பெற்று, அவ்வருளே கண்ணாக அவனை யறிந்து அன்பு செய்து, உடல் பொருள் ஆவியனைத்தும் அவனுடையனவாக்கித் தம்மை இழந்து நின்ற அடியவர், பண்டைப் பயிற்சி வயத்தால் அந்நிலையின் நிற்கப் பெறாது முன்னை மருள் நிலை தோன்றியவழி அதனைப் பொறாது வருந்தி, அது நீங்குமாறு இறைவனை அருளுவிக்க அடியவரை வேண்டுதல் இதன் உண்மைப் பொருள்.
அவர், அன்பரை வேண்டுமாற்றினை, ``எந்தை யிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்`` என்றருளிச் செய்தாற் போலும் (தி.7. ப. 73.) திருமொழிகளிற் காண்க.
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
காளத்திப் பெருமான் கல்லலகு என்ற வாச்சியத்தைக் கையில் கொண்டு, விரைந்து செல்லும் காளையை இவர்ந்து, எல்லோரும் காணும் வண்ணம் எம் வீட்டிற்குள் தாமே புகுந்து, `பிச்சை இடுமின்` என்று கூறினாராகப் பிச்சை கொண்டு வந்து பார்க்கும் போது, அவரை வீட்டினுள் எங்கும் காணேனாக, `ஒன்றும் சொல்லாதே வீட்டை விடுத்துப் போகின்றவரே! உம் ஊர் துருத்தியோ, பழனமோ, நெய்த்தானமோ யாது? என்று யான் வினவவும் கூறாது, என்னை வருத்தி, அவ்வடிகள் போகின்றார், அத்தகைய ஆமாத்தூர்த் தலைவர் எந்நிலையிலும் அழகியவர்.
குறிப்புரை:
கல்லலகு - (குறிப்புரை. ப.7. பா.1.) கடிய - விரைந்து செல்வதாகிய. `காணக்காண` என்றது, `பலருங்காண` என்றவாறு. புகுதா - புகுந்து. அயலாரோடு இரங்கிக் கூறுகின்றவள், ஆற்றாமை மிகுதியால் இடையே இறைவனை எதிர்பெய்து கொண்டு, `சொல்லாதே போகின்றீர்....நெய்த்தானமோ` என்றாள் என்க. ஓகாரங்கள் ஐயப்பொருள; `துருத்தி` என்புழியும் அவ்வோகாரம் விரிக்க.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
శ్రీకాళహస్తీశ్వరుడు వాద్యాన్ని మీటుతూ, నందినెక్కి దేహి అన్నప్పుడు, భిక్షతీసుకొని వచ్చి చూడగా అతడెక్కడా కన్పించలేదు. ఏమి చెప్పక వెళ్లినవాడా! మీ ఊరు తురుత్తియా? పళనమా! నెయ్త్తానమా ఏది? నేను ప్రశ్నించినా సమాధానం ఇవ్వక నన్ను బాధపెట్టి అతడు వెళ్తున్నాడు. అతడే ఆమాత్తూరుకు చెందిన సుందరుడు. 9
అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2024
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
षिव कल्ललगु नामक ताल वा़द्य से सुषोभित हैं।
वे काळत्ति में प्रतिष्ठित हैं।
वे वृषभ वाहन पर आरूढ़ होकर, घर-घर जाकर
‘भिक्षां देहि’ कहते हुए भिक्षा माँगते हैं।
मेरे भिक्षा देने के पूर्व ही चलने लगे हैं।
मैंने पूछा कि आपका निवास स्थान कौन सा है?
क्या तिरुथुरूत्ति है?
आपका पलनम् है?
या नेय्दानम है?
वे मेरा चिन्ता चुराकर गये हैं।
वे आमात्तूर में प्रतिष्ठित सुन्दरेष्वर नाथ हैं।।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
Seen by everyone
and holding a kallalaku
The Lord of Kaalatthi goes
mounted on a swift Bull;
Entering our house, He said: ``Give alms. ``
When I came to face Him,
He was nowhere to be seen.
``You say nothing,
but You are leaving us.
What may Your town be?
Is it Turutthi, Pazhanam
Or Neitthaanam? ``
(Thus I spake. )
Ha, He but moves away
perpetrating troubles.
Handsome indeed is
the Lord of Aamaatthoor!