வாகீசர் , திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் நாள்களில் பாண்டி நாட்டில் சைவந் தழைக்கச் செய்து மீண்டுவந்த திருஞான சம்பந்தரால் பாண்டிநாட்டின் பெருமையறிந்து ஆங்குச் செல்ல விரும்பி விடைபெற்றுத் தென்திசையே போகும் பொழுது புத்தூர் பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 402) குறிப்பு : இத்திருப்பதிகம் , ` காண் என்னும் முடிபுடைய தொடர்களால் இறைவனது பெருமைகளை வகுத்துணர்த்தி , ` அத்தகையோன் என் சிந்தையின்கண் உள்ளவனே ஆயினான் ` என அருளிச் செய்தது .
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
இதழ்கள் நிறைந்த தாமரை மலரில் விளங்கும் நான்முகனும், திருமாலும் இந்திரனும், பணிந்து துதிக்கும் வண்ணம் இருப்பவனும், இதழ்களையுடைய கொன்றை, வன்னி, ஊமத்தை ஆகிய மலர்கள் செறிந்த செஞ்சடையினனும், குற்றமற்ற சங்கம் பக்கத்தே ஏறி முத்தை ஈனும் கடற்கரையை எல்லையாக உடைய மறைக்காட்டில் வாழ் மணியும் ஆகி, வளவிய பயிர்களை மேயும் எருமை கரை மீது ஏறி நீர் நிலையில் படியும் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான்.
குறிப்புரை:
ஏடு ஏறு, தோடு ஏறு - இதழ்கள் பொருந்திய. ` ஏடு தோடு ` என வந்தது, பொருட்பின் வருநிலை, கடுக்கை - கொன்றை, துகள்தீர் - குற்றம் அற்ற ; நல்ல. சங்கம் - சங்கு. மாடு - கரை. கானல் - கடற்கரை. மேதி - எருமை. சேடு - மேடு ; என்றது, கரையை, ஏறி - கடந்து சென்று. படியும் - மூழ்குகின்ற, ` மேதி சேடு ஏறி மடுப் படியும் ` என்றது. ` மருத நிலஞ் சூழ்ந்த ` என்றபடி.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
నిండుగా దళాలున్న పద్మంలో ఆసీనుడైన బ్రహ్మ, విష్ణువు, ఇంద్రుడు వినమ్రులై స్తుతించే పరమేశ్వరుడు. రేల, ఉమ్మెత్త పుష్పాలతో శోభిల్లే కెంజడలున్నవాడు. లోపరహితమై సంగం సమీపంలో, ముత్యాలు లభించే సముద్రతీరమున్న మఱైక్కాట్టిల్ జీవిస్తున్న వజ్రనిభుడై, చక్కని పంటలున్న తిరుప్పుత్తూర్ క్షేత్రంలో కొలువున్న పరమశివుడు ఎల్లప్పుడూ నా తలపులో స్థిరమై ఉన్నాడు. 4
అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2024
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
प्रभु षिव विष्णु, ब्रह्मा, इन्द्र आदि से स्तुत्य है।
वे अपनी रक्तिम जटा में आरग्वध पुष्प, वह्नि, अर्क आदि से अलंकृत हैं।
मोतियों से समृद्ध वेदारण्यम में प्रतिष्ठित माणिक्य मणि सदृष हैं।
वे प्रभु समृद्ध तिरुप्पुत्तूर में प्रतिष्ठित हैं।
वे मेरे मन-मंदिर में विराजमान हैं।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
He abides, humbly hailed by him who is seated
On the petalled Flower, Maal and Indra; His ruddy
Matted hair is adorned with the petalled flower
Of konrai, vanni and bella donna; He is the great
Ruby of Maraikkaadu skirting the beach onto which
The flawless shells crawl and give birth to pearls;
He is enshrined at the Tirutthali at Tirupputthoor where
Healthy buffaloes move up the bank and get immersed
In the tank; even He is poised in my chinta!