தொகை
`இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
(தி.7 ப.39 பா.1)
தொகை, பொ-ரை: (சிவனடியார்க்குத்) தம்மிடத்துள்ளது எப்பொருளாயினும் அதனை இல்லை என்னாமல் வழங்கிய இயற்பகை நாயனாருக்கும் அடியேன்.
வகை
செய்தவர் வேண்டிய தியாதுங் கொடுப்பச் சிவன்றவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை யீந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட் டினத்து ளியற்பகையே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 3
வகை, பொ-ரை: சிவபெருமானை நினைந்து நினைந்து இன்புறு தலையே தவமாகச் செய்துவரும் சிவனடியார்கள் எது வேண்டினும் தவறாது கொடுத்துவரும் சிவபெருமான், தவவேடமுடன் வந்து `நின் மனைவியைத் தருக` எனக் கூறவும், மை தீட்டிய கண்களை உடைய தம் மனைவியை ஈந்தவரும், அதனால் பெரும்புகழ் வந்து எய்தப் பெற்றவரும் ஆக விளங்கியவர் காவிரிப் பூம்பட்டினத்து இயற்பகையார் ஆவர்.
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
சோழர்மரபில் தோன்றிய வெண்கொற்றக்குடை யையுடைய அநபாய சோழரது அரசியல் திருவுடைய, அவர் மரபினர், தம் மிகு புகழை விளங்கச் செய்தற்குக் காரணமாகிய சிறப்பி னால் நிலைபெற்ற பழமையாகிய புகழினையுடைய மருதவளம் மிக்க சோழநாட்டின்கண்உள்ள வயல்வளத்தைத்தருதற்குக் காரணமாய காவிரி,காலம் பிழையாது கொடுத்த நீர் வெள்ளம் பாய்ந்து கட லையும் தூய்மை செய்வதொரு நன்மை பெருகும் புண்ணிய முடைய நீர்வளம் சிறக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப் பூம்பட்டினம் ஆகும்.
குறிப்புரை:
சோழர் மரபினர் வழிவழியாக அரசியற்றி வருவதும், வயல் வளம் மிக்க நீர் நாடெனப் போற்றப்படுவதுமான சோழ நாட்டின்கண் உள்ள காவிரிப் பூம்பட்டினம், புனிதமான காவிரியை முகப்பில் கொண்டுள்ளது என்பது கருத்து. நீர் நாடு - சோழநாடு. இயல்பினில் அளித்து - காலம் தவறாதும், மிகுதல், குறைதல் இன்றியும் இயல்பிற் கொடுத்து. புணரி - கடல். முன்னுடைய - முகப்பில் கொண்ட. `மருதநீர் நாட்டு` என்பதால் நாட்டுச் சிறப்பும், `வளம் புகார் நகரம்` என்பதால் நகரச் சிறப்பும், `புணரி தன்னையும் புனிதமாக்குவதோர் நன்னெடும் தீர்த்தம்` என்பதால் ஆற்றுச் (தீர்த்தச் சிறப்பு) சிறப்பும், `அநபாயன் திருக்குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்` என்பதால் அரசியல் சிறப்பும் ஒருங்குணருமாறு செய்திருக்கும் திறம் எண்ணி மகிழ்தற்குரியதாம்.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
అనపాయ చోళ చక్రవర్తి వంశపరంపరలో వెలసిన రాజులు తమ కీర్తి చంద్రికలను దశదిశలా వ్యాపింప జేశారు. చోళదేశం ప్రాచీన కాలం నుండీ జల సమృద్ధిని కలిగి మాగాణి పంట పొలాలతో ప్రసిద్ధి వహించింది. పొంగి పొరలుతోన్న కావేరి నది పొలాలలో బంగారు పంటలను పండించి చివరకు సముద్రాన్ని కూడ పరిశుద్ధం గావిస్తున్నది. ఆ ప్రదేశంలో ఒక నగరం వెలసింది. అది పూంబుహార్, కావేరి పూంపట్టణమ్ అనే పేర్లతో ప్రసిద్ధి చెందింది.
అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
×
ಕನ್ನಡ / கன்னடம்
Under construction. Contributions welcome.
×
മലയാളം / மலையாளம்
Under construction. Contributions welcome.
×
චිඞංකළමං / சிங்களம்
Under construction. Contributions welcome.
×
Malay / மலாய்
Under construction. Contributions welcome.
×
हिन्दी / இந்தி
Under construction. Contributions welcome.
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
Famous it is by the abiding glory of the Chola kings,
-- Ancestors of the white parasolled Anapaya --,
It is maruda realm dight with waterly fields;
Here flows the Cauvery bestowing foison, and as it merges
Into the main it purifies it making it goodly, vast and glorious;
Fronting this is fecund Pukar flourishing well.