ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பதிக வரலாறு :

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவதிகை வீரட்டா னேசுவரரை வணங்கித் திருப்பணி செய்துவரும் நாள்களில் அன்பு மிக்க மனத்தினால் அருளிய திருப்பதிகங்களுள் இஃது ஒன்றாகும் . இவை இவை இறைவனுடைய காப்புக்கள் ( இடங்கள் ) என்றே எல்லாப் பாடல்களும் முடிவதால் , ` காப்புத் திருத்தாண்டகம் ` எனப் பெயர் பெற்றது . ( தி .12 திருநாவு . புரா . 144.) குறிப்பு : காப்பென்னும் தொழிற் பெயர் , காக்கப்படுவதாகிய இடத்தினைக் குறித்தது . எனவே , இறைவர் நீங்காதுறையும் இடங்களை யுணர்த்திய திருத்தாண்டகத்தை , ` காப்புத் திருத்தாண்டகம் ` என்றதாயிற்று . இத்திருப்பதிகத்துள் எல்லாத் திருத்தாண்டகங்களிலும் முதற்கண் வீரட்டானத்தை அருளிச்செய்தது , ஆங்கு இறைவரை வணங்கி இன்புறுங்காலத்து , அது வாயிலாகப் பிற திருப்பதிகளையும் திருவுள்ளத்து நினைந்தருளினமையான் என்க . இதன் திருப்பாடல்களிலும் , மேலைத் திருப்பதிகப் பாடல்களிற் போலவே , இரண்டு மாச்சீர்கட்கு ஈடாக ஒரு கனிச்சீர் பயிலுதல் அறிக .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.