ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
055 திருப்புன்கூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு : பண் : தக்கேசி

திருவாரூரில் சுவாமிகள் , புற்றிடங்கொண்டாரைப் பரவை யாரிடம் தூதாக அனுப்பிய செய்தி கேட்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார் , அவர்பால் சினம் கொண்டிருந்தார் . சுவாமிகள் அதை அறிந்து , தம் பிழையை உடன்பட்டுப் பெருமானிடம் நாள் தோறும் விண்ணப்பித்து வந்தார் . பெருமானும் இருவரையும் மனம் ஒன்றச் செய்பவராய் , ஏயர்கோன் கலிக்காமருக்குச் சூலை நோயருளி , அவரிடம் ` உன்னை வருத்தும் சூலை வன் றொண்டன் தீர்க்கில் அன்றித் தீராது ` என்று அருளினார் . கலிக்காமரும் , ` வழிவழியாகத் திருவடிபற்றி நின்று வாழ்கின்ற என்னை வருத்தும் சூலை வன்றொண்டன் தீர்ப்பதினும் தீராமலே என்னை வருத்துதலே நன்றாகும் ` என்றார் . பெருமான் வன் றொண்டர்பால் சென்று , ` நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாயாக ` என்றருளினார் . நம்பி ஆரூரர் தாமும் விரைந்து செல்பவராய் , கலிக்காமருக்கு வருதிறம் செப்பி விட்டார் . கலிக்காமரும் , ஆரூரரின் வரவு கேட்டு , ` அவர் வருவதன்முன் , நீங்காச் சூலையை உற்ற இவ்வயிற்றோடு கிழிப்பன் ` என்று கூறி , உடை வாளால் செற்றிட உயிரோடு சூலையும் தீர்ந்தது . கலிக்காமர் தேவியாரும் கணவரோடு போவது புரியுங்காலை , ` ஆரூரர் வந்தார் ` என்று முன் வந்தவர் கூறினர் . அதுகேட்டு , கணவர்தம் செய்கையை மறைத்து எதிர் கொண்டழைத்து பூசனைகள் புரிந்தார் . பின்னர் , நம்பியாரூரர் ஆவிபொன்றிடக் கிடந்த கலிக்காமரைக் கண்டு , ` புகுந்தவாறு நன்று ` என மொழிந்து , ` நானும் இவர் முன்பு நண்ணுவேன் ` என்று வாளைப்பற்ற , பெருமான் அருளால் அவரும் உய்ந்து , கேளிரேயாகிக் , ` கெட்டேன் ` என விரைந்து எழுந்து வாளினைப் பிடித்துக்கொள்ள , வன்றொண்டர் வணங்கினார் . ஏயர்கோனும் வணங்கி , நம்பியாரூரரின் குரைகழல் பணிந்தார் . பின்னர் இருவரும் எழுந்து புல்லி மகிழ்ச்சி பொங்கத் திருப்புன்கூர்ப் புனிதர்பாதம் தொழுதபொழுது பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 பெரிய . புரா . ஏயர்கோன் . புரா . 406) குறிப்பு : இத் திருப்பதிகம் , இறைவன் , பலர்க்குப் பலவகையிற் செய்த பேரருட் செயல்களை எடுத்தோதிப் புகழ்ந்தருளிச்செய்தது .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.