ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
055 திருப்புன்கூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : தக்கேசி

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
    இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
    ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
    மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேவதேவனே, வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நீ, முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக் கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை, நீ, கரிந்த காடே அரங்கமாக, உமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது அழகிய மத்தளத்தை முழக்கும் படி அருள்செய்ததை யறிந்து வந்து. அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள்.

குறிப்புரை:

` தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி ` என்னும் தலைவர் உட்படத் திரிபுரத்தில் இருந்தவர் அனைவரும் புத்தன் போதனையால் சிவநெறியைக் கைவிடவும், ` சுதன்மன், சுசீலன், சுபுத்தி ` என்னும் மூவர்மட்டும் முன்போலவே சிவநெறியில் மாறாது நின்று சிவபிரானிடத்து அன்புபூண்டு ஒழுகினமையால், சிவபெருமான் அவர்களைமட்டும் அழியாது காத்து, மேற் சொல்லியவாறு திருவருள் செய்தனன் என்க. இதனை ` மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார் ` ( தி.1 ப.69. பா.1) எனவும், ` திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த தலையானை ` ( தி.6 ப.60 பா.9) எனவும், ` உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற ` ( தி.8 திருவா. திருவுந்தி.4) எனவும் ஆசிரியர் அனைவரும் சிறந்தெடுத்தோதிப் போற்றுமாறு காண்க. இவ்வரலாறு, காஞ்சிப் புராணத்து முப்புராரிக் கோட்டப் படலத்துள் விளங்கக் கூறப்படுதல் காண்க. திரிபுரத்தலைவர், ` தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி ` என்போர் எனவும், திரிபுரத்தில் உய்ந்த மூவர், ` சுதன்மன், சுசீலன், சுபுத்தி ` என்போர் எனவும் பிரித்தறிந்து கொள்க. சிவபிரான் திருக்கோயில்களில் துவார பாலகர்களாய் நிற்பவர் இவருள் இருவரே என்பது இத் திருப்பாடலால் இனிது விளங்குதல் காண்க. இவ்வரலாறு, ` உலகிற்குத் தீங்குகள் நேரினும், சிவபிரானைப் பற்றிநிற்பாரை அவை ஒன்றுஞ் செய்யா ` என்பதனை இனிது விளக்கும். இது, முப்புரத்துள் வாழ்ந்த மூவர்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సారవంతమైన తోటలున్న తిరుపుణ్కూరు వసించే దేవా!
త్రిపురాలను నీవు దగ్ధం చేసి నప్పుడు, ఆ వినాశ నాన్నుంచి తప్పించు కొన్న వారిలో ముఖ్యులైన ముగ్గురి (సుదాముడు, సుశీలుడు, సుబుద్ధి)లో ఇద్దరిని నీవు నీ గుడిలో ద్వార పాలకులుగా నియమించావు.
జింక వంటి చూపులు గలిగిన ఉమ సంతోషించే విధంగా స్మశానాన్ని రంగ స్థలంగా జేసుకొని నీవు ఆనంద తాండవ మాడావు.
దేవతు లందరిలో ప్రధానుడవైన నీవు మ్రోగే వాయిద్యాల కనుగుణంగా నాట్య మాడావు.
నీ పాదాలను ఆశ్రయించాను. సమ్మతించు దేవా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
තෙපුර වනසා‚ ඉතිරි අසුර තිදෙනාගෙන්
දෙදෙනකුට ඔබ දෙවොලේ දොරටුව
සුරකින සේ අණ කළේ‚ එකෙකු ඔබ රඟන
‍ සොහොන් බිම බෙර වයනුයේ‚ මුව දෙන සේ
සුකොමල සුරවමිය තුටුවන අයුරින්‚ ඔබ පෑ
මෙත් කරුණා පුවත අසා‚ සොයා ආවෙමි
සසිරිබර පුදබිම වැඩ සිටිනා දෙව් රද
බැතියා රැක ගනු මැන මනහර පුන්කූරයේ සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
देवाधिादेव!
समृध्द वाटिकाओं से घिरे तिरुप्पुन्कूर में प्रतिष्ठित प्रभु!
त्रिापुर को विनष्ट करने पर जीवित बचे तीनों राक्षसों में से
दो को द्वारपाल नियुक्त कर दिया।
जब श्मशान को रंगशाला बनाकर
उमा देवी के साथ नृत्य कर रहे थे,
तब मृदंग बजाने के लिए
तीसरे को नियुक्त किया।
इस कार्य से मैं परिचित था।
इसलिए मैं आपके आश्रय में आया हूँ।
मुझे स्वीकार करो प्रभु!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is in tiruppuṉkūr which has fertile gardens!
when you destroyed the three forts among the three who escaped from destruction after you appointed two of them to be sentinels at the entrance of your temple.
when you performed the great dance to be witnessed with joy by Umai who had looks like the deer, .
.
.
in the arena of scorched cremation ground.
the supreme god above all other tever, who bestowed your grace to play on the beautiful muḻavu, on the other one!
I approached your holy feet;
please accept me.
NOTE_MYTHO: All the acurar in the three cities including the leaders Tārakākkaṉ, Kamālākkaṉ and Vittiyuṉmāli who were ardent devotees of Civaṉ turned inimical towards Civaṉ by the cunning teachings of Vishnu who incarnated as Buddha;
Cutāṉmaṉ, Cucilaṉ and Cuputti were the three who did not pay heed to those words and stood steadfast in their devotion to Civaṉ.
Therefore Civaṉ destroyed all other acurar, except these three.
This is found mentioned in Tēvāram and Tiruvācakam;
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀽𑀯𑁂𑁆𑀬𑀺𑀮𑁆 𑀘𑁂𑁆𑀶𑁆𑀶 𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀬𑁆𑀦𑁆𑀢 𑀫𑀽𑀯𑀭𑀺𑀮𑁆
𑀇𑀭𑀼𑀯𑀭𑁆 𑀦𑀺𑀷𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑀺𑀷𑁆 𑀯𑀸𑀬𑁆𑀢𑀮𑁆
𑀓𑀸𑀯 𑀮𑀸𑀴𑀭𑁆𑀏𑁆𑀷𑁆 𑀶𑁂𑀯𑀺𑀬 𑀧𑀺𑀷𑁆𑀷𑁃
𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁆 𑀦𑀻𑀓𑀭𑀺 𑀓𑀸𑀝𑀭𑀗𑁆 𑀓𑀸𑀓
𑀫𑀸𑀷𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀬𑁄𑀭𑁆 𑀫𑀸𑀦𑀝𑀫𑁆 𑀫𑀓𑀺𑀵
𑀫𑀡𑀺𑀫𑀼 𑀵𑀸𑀫𑀼𑀵𑀓𑁆 𑀓𑀯𑀭𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀢𑁂𑀯 𑀢𑁂𑀯𑀦𑀺𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺 𑀬𑀝𑁃𑀦𑁆𑀢𑁂𑀷𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑁆𑀧𑁄𑁆 𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀓𑀽𑀭𑀼 𑀴𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মূৱেযিল্ সেট্র ঞাণ্ড্রুয্ন্দ মূৱরিল্
ইরুৱর্ নিন়্‌দিরুক্ কোযিলিন়্‌ ৱায্দল্
কাৱ লাৰর্এণ্ড্রেৱিয পিন়্‌ন়ৈ
ওরুৱন়্‌ নীহরি কাডরঙ্ কাহ
মান়ৈ নোক্কিযোর্ মানডম্ মহিৰ়
মণিমু ৰ়ামুৰ়ক্ কৱরুৰ‍্ সেয্দ
তেৱ তেৱনিন়্‌ তিরুৱডি যডৈন্দেন়্‌
সেৰ়ুম্বো ৰ়িল্দিরুপ্ পুন়্‌গূরু ৰান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே


Open the Thamizhi Section in a New Tab
மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

Open the Reformed Script Section in a New Tab
मूवॆयिल् सॆट्र ञाण्ड्रुय्न्द मूवरिल्
इरुवर् निऩ्दिरुक् कोयिलिऩ् वाय्दल्
काव लाळर्ऎण्ड्रेविय पिऩ्ऩै
ऒरुवऩ् नीहरि काडरङ् काह
माऩै नोक्कियोर् मानडम् महिऴ
मणिमु ऴामुऴक् कवरुळ् सॆय्द
तेव तेवनिऩ् तिरुवडि यडैन्देऩ्
सॆऴुम्बॊ ऴिल्दिरुप् पुऩ्गूरु ळाऩे
Open the Devanagari Section in a New Tab
ಮೂವೆಯಿಲ್ ಸೆಟ್ರ ಞಾಂಡ್ರುಯ್ಂದ ಮೂವರಿಲ್
ಇರುವರ್ ನಿನ್ದಿರುಕ್ ಕೋಯಿಲಿನ್ ವಾಯ್ದಲ್
ಕಾವ ಲಾಳರ್ಎಂಡ್ರೇವಿಯ ಪಿನ್ನೈ
ಒರುವನ್ ನೀಹರಿ ಕಾಡರಙ್ ಕಾಹ
ಮಾನೈ ನೋಕ್ಕಿಯೋರ್ ಮಾನಡಂ ಮಹಿೞ
ಮಣಿಮು ೞಾಮುೞಕ್ ಕವರುಳ್ ಸೆಯ್ದ
ತೇವ ತೇವನಿನ್ ತಿರುವಡಿ ಯಡೈಂದೇನ್
ಸೆೞುಂಬೊ ೞಿಲ್ದಿರುಪ್ ಪುನ್ಗೂರು ಳಾನೇ
Open the Kannada Section in a New Tab
మూవెయిల్ సెట్ర ఞాండ్రుయ్ంద మూవరిల్
ఇరువర్ నిన్దిరుక్ కోయిలిన్ వాయ్దల్
కావ లాళర్ఎండ్రేవియ పిన్నై
ఒరువన్ నీహరి కాడరఙ్ కాహ
మానై నోక్కియోర్ మానడం మహిళ
మణిము ళాముళక్ కవరుళ్ సెయ్ద
తేవ తేవనిన్ తిరువడి యడైందేన్
సెళుంబొ ళిల్దిరుప్ పున్గూరు ళానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මූවෙයිල් සෙට්‍ර ඥාන්‍රුය්න්ද මූවරිල්
ඉරුවර් නින්දිරුක් කෝයිලින් වාය්දල්
කාව ලාළර්එන්‍රේවිය පින්නෛ
ඔරුවන් නීහරි කාඩරඞ් කාහ
මානෛ නෝක්කියෝර් මානඩම් මහිළ
මණිමු ළාමුළක් කවරුළ් සෙය්ද
තේව තේවනින් තිරුවඩි යඩෛන්දේන්
සෙළුම්බො ළිල්දිරුප් පුන්හූරු ළානේ


Open the Sinhala Section in a New Tab
മൂവെയില്‍ ചെറ്റ ഞാന്‍റുയ്ന്ത മൂവരില്‍
ഇരുവര്‍ നിന്‍തിരുക് കോയിലിന്‍ വായ്തല്‍
കാവ ലാളര്‍എന്‍ റേവിയ പിന്‍നൈ
ഒരുവന്‍ നീകരി കാടരങ് കാക
മാനൈ നോക്കിയോര്‍ മാനടം മകിഴ
മണിമു ഴാമുഴക് കവരുള്‍ ചെയ്ത
തേവ തേവനിന്‍ തിരുവടി യടൈന്തേന്‍
ചെഴുംപൊ ഴില്‍തിരുപ് പുന്‍കൂരു ളാനേ
Open the Malayalam Section in a New Tab
มูเวะยิล เจะรระ ญาณรุยนถะ มูวะริล
อิรุวะร นิณถิรุก โกยิลิณ วายถะล
กาวะ ลาละรเอะณ เรวิยะ ปิณณาย
โอะรุวะณ นีกะริ กาดะระง กากะ
มาณาย โนกกิโยร มานะดะม มะกิฬะ
มะณิมุ ฬามุฬะก กะวะรุล เจะยถะ
เถวะ เถวะนิณ ถิรุวะดิ ยะดายนเถณ
เจะฬุมโปะ ฬิลถิรุป ปุณกูรุ ลาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မူေဝ့ယိလ္ ေစ့ရ္ရ ညာန္ရုယ္န္ထ မူဝရိလ္
အိရုဝရ္ နိန္ထိရုက္ ေကာယိလိန္ ဝာယ္ထလ္
ကာဝ လာလရ္ေအ့န္ ေရဝိယ ပိန္နဲ
ေအာ့ရုဝန္ နီကရိ ကာတရင္ ကာက
မာနဲ ေနာက္ကိေယာရ္ မာနတမ္ မကိလ
မနိမု လာမုလက္ ကဝရုလ္ ေစ့ယ္ထ
ေထဝ ေထဝနိန္ ထိရုဝတိ ယတဲန္ေထန္
ေစ့လုမ္ေပာ့ လိလ္ထိရုပ္ ပုန္ကူရု လာေန


Open the Burmese Section in a New Tab
ムーヴェヤリ・ セリ・ラ ニャーニ・ルヤ・ニ・タ ムーヴァリリ・
イルヴァリ・ ニニ・ティルク・ コーヤリニ・ ヴァーヤ・タリ・
カーヴァ ラーラリ・エニ・ レーヴィヤ ピニ・ニイ
オルヴァニ・ ニーカリ カータラニ・ カーカ
マーニイ ノーク・キョーリ・ マーナタミ・ マキラ
マニム ラームラク・ カヴァルリ・ セヤ・タ
テーヴァ テーヴァニニ・ ティルヴァティ ヤタイニ・テーニ・
セルミ・ポ リリ・ティルピ・ プニ・クール ラアネー
Open the Japanese Section in a New Tab
mufeyil sedra nandruynda mufaril
irufar nindirug goyilin faydal
gafa lalarendrefiya binnai
orufan nihari gadarang gaha
manai noggiyor manadaM mahila
manimu lamulag gafarul seyda
defa defanin dirufadi yadainden
seluMbo lildirub bunguru lane
Open the Pinyin Section in a New Tab
مُووٕیِلْ سيَتْرَ نعانْدْرُیْنْدَ مُووَرِلْ
اِرُوَرْ نِنْدِرُكْ كُوۤیِلِنْ وَایْدَلْ
كاوَ لاضَرْيَنْدْريَۤوِیَ بِنَّْيْ
اُورُوَنْ نِيحَرِ كادَرَنغْ كاحَ
مانَيْ نُوۤكِّیُوۤرْ مانَدَن مَحِظَ
مَنِمُ ظامُظَكْ كَوَرُضْ سيَیْدَ
تيَۤوَ تيَۤوَنِنْ تِرُوَدِ یَدَيْنْديَۤنْ
سيَظُنبُو ظِلْدِرُبْ بُنْغُورُ ضانيَۤ


Open the Arabic Section in a New Tab
mu:ʋɛ̝ɪ̯ɪl sɛ̝t̺t̺ʳə ɲɑ:n̺d̺ʳɨɪ̯n̪d̪ə mu:ʋʌɾɪl
ʲɪɾɨʋʌr n̺ɪn̪d̪ɪɾɨk ko:ɪ̯ɪlɪn̺ ʋɑ:ɪ̯ðʌl
kɑ:ʋə lɑ˞:ɭʼʌɾɛ̝n̺ re:ʋɪɪ̯ə pɪn̺n̺ʌɪ̯
ʷo̞ɾɨʋʌn̺ n̺i:xʌɾɪ· kɑ˞:ɽʌɾʌŋ kɑ:xʌ
mɑ:n̺ʌɪ̯ n̺o:kkʲɪɪ̯o:r mɑ:n̺ʌ˞ɽʌm mʌçɪ˞ɻʌ
mʌ˞ɳʼɪmʉ̩ ɻɑ:mʉ̩˞ɻʌk kʌʋʌɾɨ˞ɭ sɛ̝ɪ̯ðʌ
t̪e:ʋə t̪e:ʋʌn̺ɪn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪ· ɪ̯ʌ˞ɽʌɪ̯n̪d̪e:n̺
sɛ̝˞ɻɨmbo̞ ɻɪlðɪɾɨp pʊn̺gu:ɾɨ ɭɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
mūveyil ceṟṟa ñāṉṟuynta mūvaril
iruvar niṉtiruk kōyiliṉ vāytal
kāva lāḷareṉ ṟēviya piṉṉai
oruvaṉ nīkari kāṭaraṅ kāka
māṉai nōkkiyōr mānaṭam makiḻa
maṇimu ḻāmuḻak kavaruḷ ceyta
tēva tēvaniṉ tiruvaṭi yaṭaintēṉ
ceḻumpo ḻiltirup puṉkūru ḷāṉē
Open the Diacritic Section in a New Tab
мувэйыл сэтрa гнaaнрюйнтa мувaрыл
ырювaр нынтырюк коойылын ваайтaл
кaвa лаалaрэн рэaвыя пыннaы
орювaн никары кaтaрaнг кaка
маанaы нооккыйоор маанaтaм мaкылзa
мaнымю лзаамюлзaк кавaрюл сэйтa
тэaвa тэaвaнын тырювaты ятaынтэaн
сэлзюмпо лзылтырюп пюнкурю лаанэa
Open the Russian Section in a New Tab
muhwejil zerra gnahnruj:ntha muhwa'ril
i'ruwa'r :ninthi'ruk kohjilin wahjthal
kahwa lah'la'ren rehwija pinnä
o'ruwan :nihka'ri kahda'rang kahka
mahnä :nohkkijoh'r mah:nadam makisha
ma'nimu shahmushak kawa'ru'l zejtha
thehwa thehwa:nin thi'ruwadi jadä:nthehn
zeshumpo shilthi'rup punkuh'ru 'lahneh
Open the German Section in a New Tab
mövèyeil çèrhrha gnaanrhòiyntha mövaril
iròvar ninthiròk kooyeilin vaaiythal
kaava laalharèn rhèèviya pinnâi
oròvan niikari kaadarang kaaka
maanâi nookkiyoor maanadam makilza
manhimò lzaamòlzak kavaròlh çèiytha
thèèva thèèvanin thiròvadi yatâinthèèn
çèlzòmpo 1zilthiròp pònkörò lhaanèè
muuveyiil cerhrha gnaanrhuyiintha muuvaril
iruvar ninthiruic cooyiilin vayithal
caava laalharen rheeviya pinnai
oruvan niicari caatarang caaca
maanai nooicciyoor maanatam macilza
manhimu lzaamulzaic cavarulh ceyitha
theeva theevanin thiruvati yataiintheen
celzumpo lzilthirup puncuuru lhaanee
mooveyil se'r'ra gnaan'ruy:ntha moovaril
iruvar :ninthiruk koayilin vaaythal
kaava laa'laren 'raeviya pinnai
oruvan :neekari kaadarang kaaka
maanai :noakkiyoar maa:nadam makizha
ma'nimu zhaamuzhak kavaru'l seytha
thaeva thaeva:nin thiruvadi yadai:nthaen
sezhumpo zhilthirup punkooru 'laanae
Open the English Section in a New Tab
মূৱেয়িল্ চেৰ্ৰ ঞান্ৰূয়্ণ্ত মূৱৰিল্
ইৰুৱৰ্ ণিন্তিৰুক্ কোয়িলিন্ ৱায়্তল্
কাৱ লালৰ্এন্ ৰেৱিয় পিন্নৈ
ওৰুৱন্ ণীকৰি কাতৰঙ কাক
মানৈ ণোক্কিয়োৰ্ মাণতম্ মকিল
মণামু লামুলক্ কৱৰুল্ চেয়্ত
তেৱ তেৱণিন্ তিৰুৱটি য়টৈণ্তেন্
চেলুম্পো লীল্তিৰুপ্ পুন্কূৰু লানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.