தலைவாயில்                                                  ஆராய்ச்சியுரை தொடர்ச்சி... | 12 |   45 அடிக்குறிப்புகள் பார்க்க...

மணிவாசகர் சரித்திரம் என்ற நூலை ஆக்கியவர் பி.ஷ்ரீ. ஆசாரியார் ஆவர்15. இது 1929இல் வெளிவந்தது. இந்நூலில் திருச்சிற்றம்பலக் கோவை பற்றிய செய்திகள் சில கூறப்பட்டுள்ளன.

இராவ் பகதூர் தணிகைமணி டாக்டர் .சு. செங்கல்வராய பிள்ளை ஒரு மிகச் சிறந்த திருமுறை ஆய்வாளர். திருக்கோவையாரை முழுமையாக உரைநடையில் தந்த பெரியவர் அவர். அவரது "திருக்கோவையார் உரைநடை"யை 1970இல் கழகம் வெளியிட்டது16. இந்நூலின் பதிப்புரையில் ஓர் அற்புதமான தகவல் காணப்படுகிறது. "இத் திருக்கோவையார் நானூறு தெய்வப் பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது. (இந்நூல்) `திரு' எனத் தொடங்கி `ஊதியம்' என நிறைவுறுகின்றது17". திரு என்றால் செல்வம் என்று பொருள், செல்வம் என்பது செல்வன் கழல் ஏத்தும் செல்வமே. மணிவாசகரும் சிவபுராணத்தில்,

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து"

என்று அருளியுள்ளார். திருக்கோவையாரை ஓதுவதால் திருவே ஊதியமாக விளையும்.

தணிகை மணி அவர்கள் திருக்கோவையார் ஒளிநெறி18 என்றதோர் அற்புத நூலின் ஆசிரியருமாவார். திருக்கோவையாரின் அருமை பெருமைகள் இந்நூலில் 54 தலைப்புகளில் தொகுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இந்நூல் போற்றிப் பயிலப்பட வேண்டிய நூல். திருக்கோவையாரில் அடங்கியுள்ள கரந்துறைப் பாடல்கள் 256 முதல் 259 முடிய உள்ள பக்கங்களில் பட்டியல் இடப்பட்டிருக் கின்றன. திருக்கோவையார் பாடல்களில் 28 குறட்பாக்கள் அடங்கியுள்ளன. காட்டாக ஒன்று காண்பம். பாடல் 56 பின்வருமாறு:

தாரென்ன ஓங்குஞ் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த

காரென்ன ஆகுங் கறைமிடற் றம்பல வன்கயிலை

ஊரென்ன என்னவும் வாய்திற வீர்; ஒழி வீர்பழியேற்

பேரென்ன வோஉரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே.

இப்பாடலில் "ஊரென்ன என்னவும் வாய்திற வீர்பழியேல், பேரென்ன வோவுரை யீர்" என்ற குறள் கரந்துறைகிறது. இது போல் திருக்கோவையாரில் இன்னிசை வெண்பாக்களும், கொச்சகக் கலிப்பாக்களும் அகவல்களும் கரந்துள்ளமை இவரால் நன்கு காட்டப்பட்டிருக்கின்றன.

கல்லாடாம் என்ற நூலின் "செய்யுட்கள் சொல்லால் சங்கச் செய்யுட்களைச் சார்ந்தும், பொருளால் இடைக்கால இலக்கியத்துக்கு இயைந்தும் இருக்கின்றன; சொல் செறிவுடையன; பொருள், புராணக் கலப்புடையது. திருவாதவூரடிகள் அருளிய திருக்கோவையாரின் நலத்தை உலகம் அறியச் செய்வதற்காக, அதிலிருந்து நூறு துறைகளைத் தேர்ந்து ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வோர் ஆசிரியப்பா இயற்றி, தமிழறியும் பெருமானாகிய ஆலவாய் அண்ணலின் தெய்வத்திருமுன் இவ்வாசிரியர் ஓதியபோது, பாட்டுக்கு உருகும் பனிமலைவல்லிபங்கன், ஒவ்வொரு செய்யுள் முடியும் போதும், தன் திருமுடியைத் துளக்கி மகிழ்ந்தார் என்று ஒரு பழம் பேச்சு, இந்நூலின் சிறப்பைத் தெரிவிக்கும் நோக்கத்தோடு, நம் நாட்டில் வழங்கி வருகிறது19."

யானை, மான் ஆகியவற்றை வியாஜமாகக் கொண்டு, "இங்கு அவை வந்தனவோ?" என்று கேட்டபடி தலைவன், தலைவியும், பாங்கியும் இருந்த இடத்திற்கு வந்தனன். மறுமுறையும் ஒரு தடவை அவர்கள் இருந்த இடத்திற்கு வருகிறான். "யாவன் இவன்?" என்று தோழி ஐயுறுகிறாள்.

""lÈÕÊ c[çQ lç¿ÊÙ·Ì ö¯[Ì¥È¿Ê l[~ÊCöl[È

¬ÈÕÊ c[çÍ ÙG[ö~cÄ yc[yæ·Ì æ[·Ì Ùç[Ê[Ä''

என்று தோழி ஐயுறுகிறாள். (நாகம் - யானை; ஏனம் - கடுவாய் (பன்றி).)

"ஏனம் வந்ததா?" என்று வினவிக் கொண்டு தலைவன் வரவில்லை. ஆகவே பதிப்பாசிரியர், தாம் வரைந்த அடிக்குறிப்பில், "ஏனம் வினாவியதற்குச் செய்யுளில்லை" என்று கூறியிருக்கிறார்20.

பாடலை ஊன்றிப் பயின்ற தமிழ்த்தாத்தா, "ஏனம் என்ற பாடம் சரியன்று; ஏணம் என்ற பாடமே சரி21" என்று அறிவித்திருக்கிறார். ஏணம் என்றால் மான் என்று பொருள். பிங்கல நிகண்டு காண்க.

தமிழ்த் தாத்தா .வே.சாமிநாத ஐயர் சிவதீட்சை பெற்றவர். சிவபூசைச் செம்மல். திருமுறைகளில் அவருக்கு எல்லையற்ற ஈடுபாடு உண்டு. அவர் திருக்கோவையாரை நன்கு ஓதியவர். தாம் பதிப்பித்த பல நூல்களில் குறிப்புரைகளில் திருமுறைகளிலிருந்தும், மெய்கண்ட சாத்திரங்களிலிருந்தும் பலப்பல மேற்கோள்கள் வழங்கியுள்ளார். அப்பெரியாருக்கு உரையோடு கூடிய திருக்கோவையார் சுவடி ஒன்று கிட்டியது. உரையாசிரியர் பெயர் மணக்குடவர். இவர் திருக்குறளுக்கு உரைவரைந்த மணக்குடவரின் வேறானவர். திருக்கோவையாருக்கு வரையப்பட்ட கொளுக்களுக்கும் இவர் உரை வரைந்துள்ளார். பெற்ற சுவடியைச் சிறப்பாகப் பதிப்பிக்கக் கருதிய ஐயர் அவர்கள் பலப்பல செய்திகளைச் சேகரித்தார். இங்கு ஒன்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஐயரே பதிப்பிக்காமல், ஆனால் ஐயரே பதிப்பிற்குச் சமைவாக அமைத்து வைத்திருந்த பல நூல்களை ஐயர் பெயர் தாங்கிய நூல்நிலையம் பதிப்பித்து வருகிறது. இதற்காக நிலையத்தாரைப் பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். என்றாலும், இவ்வாறு பதிப்பிக்கப்பட்ட நூல்கள் எல்லாம் ஐயரின் பதிப்புகளின் தரத்தை எட்டவில்லை. ஐயர் நூல் நிலையம் வெளியிட்ட "மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருச்சிற்றம்பலம் கோவையார் (மணக்குடவர் உரை)22" என்ற நூலும் நான்முன் சொன்ன கருத்துக்கு விதிவிலக்கு அன்று. இந்நூலில் "சிற்றாராய்ச்சியில் சில" என்ற தலைப்பில் பல அருமையான செய்திகள் உள. உலக சுந்தர முதலியார் பாடிய மாணிக்கவாசக வெண்பாப் பாடல்களும் இந்நூலில் இணைக்கப்பட்டிருக்கின்றன. கொளுக்களுக்கான உரை தனிப் புத்தகமாகவே வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கிளவித் தொகையும், அருஞ்சொல் அகராதியும் உள்ளன.

உரையாசிரியரான மணக்குடவர், திருக்குறள் உரையாசிரியரான மணக்குடவருக்கும் காலத்தால் முற்பட்டவர். பேராசிரியர் உரையைக் காட்டிலும் சில இடங்களில் இவர் சற்று விரிவாகவே உரை கண்டிருக்கிறார். துரதிருஷ்டவசமாக ஐயர் பெற்ற சுவடியில் பாடல் 39 முதல் 60 வரையிலும் பாடல் 337 முதல் 400 வரையிலும் உள்ள பாடலுக்கான உரை காணப்படவில்லை. ஆகவே இச்செய்யுள்களுக்கு ஐயர் நூலகத்தில் இருந்த வேறு ஒரு சுவடியிலிருந்து பதிப்பாசிரியர் பதவுரையைச் சேகரித்துத் தந்திருக்கிறார்.

கொளு எண் முப்பத்து ஐந்திற்கும் இந்நூலில் உரையில்லை. `உரையில்லை' என்ற செய்தியும் நூலுள் காணப்படவில்லை. முப்பத்து ஐந்தாம் செய்யுளும் உரையும் நூலில் காணப்படுகின்றன. ஆகவே கொளு முப்பத்து ஐந்திற்கான உரை, பதிப்பில் விடுபட்டுவிட்டது என்று கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் 39 முதல் 59, 337 முதல் 400 என்ற எண்களைப் பெற்ற பாடல்களுக்கான கொளுக்களுக்கும் உரையில்லை. இச்செய்தியைப் பதிப்பாசிரியரே தந்துள்ளார்.

இந்நூலின் பக்கம் 371 தொடங்கிப் பக்கம் 383 முடிய உள்ள பகுதியில் ஐயர் அவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதி, "காப்பு : எழு கோபுரம் - எழுநிலையை உடைய கோபுரம்..." என்று தொடங்குகிறது. ஆனால் நூலில் இங்குக் கூறப்பட்ட காப்புச் செய்யுள் இல்லை. மேலும் ஐயர் அவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் என்ற பகுதியை அடுத்து "ஐயரவர்கள் ஆராய்ச்சிக் குறிப்பு" (பக்கங்கள் 384, 385, 386) என்று ஒரு பகுதி வருகிறது. இப்படி வந்துவிட்ட குழறுபடையைத் தவிர்த்திருக்கலாம்.

¬L ¬Ql¶íI{G[qÄ x¿Ê Ù·äíR~ ã¿ÊæÍà¡N D[Ä ç~¿tQlR¶In¦ö¯[Ä.

திருக்கோவையார் - ஆங்கில நூல்கள்:

கிளென் யோகும் என்ற அமெரிக்க அறிஞர் தமிழை நன்கு கற்றவர். இவர் "ஆடல் வல்ல சிவனுக்கான அருட்பாடல்கள்"23 என்ற ஓர் ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வரைந்திருக்கிறார். இந்நூல் திருவாசகம் பற்றியது. திருவாசகத்தில் தோய்ந்து, அதன் பெருமைகளைப் பெரிய அளவில் உணர்ந்திருக்கும் இவர், திருக்கோவையார் ஒரு கடினமான நூலாதலால் அதைப் படித்துணரத் தமக்கு வாய்ப்பில்லாதது பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.24 இவருக்கு உதவவேண்டும் என்று கருதியே, நான் திருக்கோவையார் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். என் மொழி பெயர்ப்பின் ஒரு படியை அவருக்கு நான் நேரில் வழங்கிய போது அவர் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்.

தமிழ் இலக்கியம் என்ற நூல், ஆங்கிலப் பேராசிரியர் எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை அவர்களால் வரையப்பட்டு, 1929இல் வெளிவந்தது. இதன் மறுபதிப்பு 1985இல் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாக வந்தது25. இந்நூலின் பெருமையைப் பண்பட்ட ஒரு சிலரே உணர முடியும் என்று பிள்ளை அவர்கள் அறிவித்துள்ளார்26.

1930இல் பேராசிரியர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் வரைந்த "தமிழ் இலக்கியத்திலும் சரித்திரத்திலும் ஆய்வுகள்"27 என்ற நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. இந்நூலில் தீட்சிதர் அவர்கள், மேலெழுந்தவாரியாகப் படிப்போர் இதனைக் காம நூலாகக் கருதுவர் என்றும், இத்தோற்றம், அற்புதமான எழிலுடைச் சமய உண்மைகளையும், கருத்துக்களையும், இலேசாக மூடி நிற்கும் ஒரு போர்வை என்றும் கூறியுள்ளார்28. இந்நூல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் மறுபதிப்புப் பெற்றுள்ளது.

1937-இல் இலங்கை அரசு, சர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் ஆங்கிலத்தில் வரைந்த, "ஆய்வுகளும் மொழி பெயர்ப்புக்களும்" என்ற நூலை வெளியிட்டது. 1981இல் இந்நூல் மீளவும் பதிப்பிக்கப்பட்டது29. இந்நூலில் திருக்கோவையார் பாடல்கள் சில, மூலமும், மொழி பெயர்ப்புமாகத் தரப்பட்டிருக்கின்றன. திருவளர் தாமரை என்று தொடங்கும் பாடலும், போதோ விசும்போ என்று தொடங்கும் பாடலும், பாயும் விடையரன் என்று தொடங்கும் பாடலும், அணியும் அமிழ்தும் என்று தொடங்கும் பாடலும், வளைபயில் என்று தொடங்கும் பாடலும், அளவியை யார்க்கும் என்று தொடங்கும் பாடலும், கூம்பலங் கைத்தலத்து என்று தொடங்கும் பாடலும், சிந்தாமணி என்று தொடங்கும் பாடலும், சிறை வான் புனல் என்று தொடங்கும் பாடலும், விழியாற் பிணையாம் என்று தொடங்கும் பாடலும், வடிக்கணிவை என்று தொடங்கும் பாடலும், இருங்களி என்று தொடங்கும் பாடலும், மைவார் கருங்கண்ணி என்று தொடங்கும் பாடலும், அக்கின்றவா என்று தொடங்கும் பாடலும், செந்நிற மேனி என்று தொடங்கும் பாடலும், காகத்திரு கண் என்று தொடங்கும் பாடலும், தாதேய் மலர்க்கு என்று தொடங்கும் பாடலும், வரிசேர்த் தடங்கண்ணி என்று தொடங்கும் பாடலும், தேமென் கிளவி என்று தொடங்கும் பாடலும், அந்தியின் வாயெழில் என்று தொடங்கும் பாடலும், தெங்கம்பழம் என்று தொடங்கும் பாடலும் அருணாசலம் அவர்களால் நன்கு உரைநடையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன30. இவை காட்சி, ஐயம், தெளிதல், உட்கோள், தெய்வத்தை மகிழ்தல், கிளவி வேட்டல், நலம் புனைந்துரைத்தல், பிரிவுணர்த்தல், பாங்கன் வினாதல், இயலிடங் கூறல், குறிவழிக் காண்டல், வேழம் வினாதல், பிறைதொழுகென்றல், வேறுபடுத்துக் கூறல், சுனையாடல் கூறிநகைத்தல், மதியுடம்படுதல், குறிப்பறிதல், மென் மொழியாற் கூறல், தழை கொண்டு சேறல், நீயே கூறென்று மறுத்தல், குலமுறை கூறி மறுத்தல் என்பனவற்றைப் பற்றியவை.

1961இல் திரு.ஜேசுதாசன், திருமதி.ஜேசுதாசன் ஆகியோர் ஆங்கிலத்தில் வரைந்த தமிழ் இலக்கியத்தின் ஒரு சரித்திரம் என்ற நூல் வெளிவந்தது31. சங்க இலக்கிய அகப் பொருள் பற்றிய நூல் திருக்கோவையார் என்றும் இதில் பேசப்படும் காதல் கடவுளுக்கும், ஆன்மாவிற்கும் இடையே உள்ள காதல் என்றும், இந்நூல் தீர்மானமான உருப்பெற்ற ஒன்று என்றும், இது கோவை நூல்களில் தலையாய நூல் என்றும் இவ்வாரிசியர்கள் கூறியுள்ளனர்32.

1963இல் கலைப்புலவர் . நவரத்னம் அவர்கள், ஆங்கிலத்தில் வரைந்த "இந்து சமய ஆய்வுகள்" என்ற நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது33. இந்நூலுக்கான முகவுரையை வரைந்தவர் முனைவர் டி. எம். பி. மகாதேவன் அவர்கள். இந்நூலாசிரியர் நாயக - நாயகி பக்தியை உணர்த்தும் மகோன்னதமான தமிழ்நூல் திருக்கோவையார் என்றும், இஃதோர் ஞானப் பனுவல் என்றும் கூறுகிறார்34.

தலைவாயில்          ஆராய்ச்சியுரை தொடர்ச்சி... | 1245 அடிக்குறிப்புகள் பார்க்க...